உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா

துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா

துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படம் நாளை (நவ-20) வெளியாக இருக்கிறது. கதாநாயகிகளாக ஸ்ருதிஹாசன், சாத்விகா வீரவல்லி ஆகியோர் நடித்துள்ளனர். பவன் சதினேனி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு விதமான விளம்பர யுக்திகளைப் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு பிராங்க் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டாவை தனது போனில் அழைக்கிறார். துல்கர் பெயரைப் பார்த்ததும் விஜய் தேவரகொண்டா அந்த போனை அட்டென்ட் செய்ய, துல்கருக்குப் பதிலாக ஒரு சிறிய பெண் விஜய்யிடம் பேசுகிறார். சாலையில் ஒரு போன் கிடந்ததாகவும், அதில் எமர்ஜென்சி அழைப்பு என்கிற பட்டியலில் உங்கள் எண் இருந்ததால் அழைத்ததாகவும் கூறுகிறார். உடனே அதை அப்படியே நம்பிவிட்ட விஜய் தேவரகொண்டா, தான் சொல்லும் ஒரு எண்ணுக்கு போனை கொண்டு சேர்க்குமாறு அறிவுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டிக்கிறார்..

பிறகு சில நிமிடங்களிலேயே துல்கர் சல்மான் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுக்கு போன் செய்து இது ஒரு திட்டமிட்ட பிராங்க் அழைப்பு என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறார். இப்படி அந்த வீடியோவில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !