உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 16 லட்சத்தில் வாடகை வீடு, 100 கோடியில் சொந்த வீடு : அல்லு அர்ஜுன் புதிய பிளான்

16 லட்சத்தில் வாடகை வீடு, 100 கோடியில் சொந்த வீடு : அல்லு அர்ஜுன் புதிய பிளான்

தெலுங்கு இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக மாறிவிட்டார். தற்போது அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராக்கா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்பையில் தான் தங்குவதற்கு வசதியாக ஜூஹூ பீச் பகுதியில் கடலை பார்த்தபடி உள்ள ஐந்து பெட்ரூம், நாலு கார் பார்க்கிங் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றை மூன்று வருடத்திற்கு வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். இதன் ஒரு மாத வாடகை 16 லட்சம் ரூபாய்.

இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத்தில் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது கனவு இல்லத்தை கட்ட வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அந்த வகையில் தற்போது 3,600 சதுர அடி பரப்பளவில் 100 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் அல்லு அர்ஜுன். ஜுப்ளிகில் ஹில்ஸில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டிற்கு அருகிலேயே வலது பக்கத்தில் இந்த வீடு கட்டப்பட்டு வருவது தான் இதில் ஹைலைட்டான அம்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !