உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேட்ரியாட் படத்தில் வில்லன் பெயரை மாற்ற சென்சார் வலியுறுத்தியதா ?

பேட்ரியாட் படத்தில் வில்லன் பெயரை மாற்ற சென்சார் வலியுறுத்தியதா ?

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது. விஸ்வரூபம் படம் எடிட்டரும் டேக் ஆப், மாலிக் படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் பஹத் பாசில் தான் வில்லனாக நடிக்கிறார். தற்போது இந்த படம் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது.

ராணுவத்தை மையப்படுத்திய படம் என்பதால் படம் பார்த்த அதிகாரிகள் படத்தில் சில இடங்களில் கட் கொடுத்து நீக்கும்படி கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் வில்லனின் பெயர் ஒரு பிரபல அரசியல்வாதியின் மகனை குறிப்பது போல இருப்பதால் அந்த பெயரை மாற்றும்படி வலியுறுத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் வில்லன் பெயர் மாற்ற சொன்னதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் சின்னச் சின்ன கரெக்சன்கள் தான் என்றும் அவை படத்தின் கதையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !