உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்ஸிக்' படத்தில் நெருக்கமான காட்சியை நீக்கும்படி கியாரா அத்வானி பிடிவாதம்

'டாக்ஸிக்' படத்தில் நெருக்கமான காட்சியை நீக்கும்படி கியாரா அத்வானி பிடிவாதம்


பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தெலுங்கில் நடித்த 'கேம் சேஞ்சர்' மற்றும் ஹிந்தியில் நடித்த 'வார் 2' திரைப்படங்கள் பெரிய அளவிற்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் யஷ் நடிப்பில் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் கியாரா அத்வானி. பெண் இயக்குனர் தான் என்றாலும் கூட இந்த படத்தில் இருந்து அவ்வப்போது வெளியான கிளிம்ப்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த நிலையில் படத்தில் நடிகர் யஷ்ஷுடன் இணைந்து நெருக்கமாக நடித்த காட்சியின் கிளிம்ப்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் தற்போது இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கும்படி இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம் கியாரா அத்வானி.

காரணம் படப்பிடிப்பு சமயத்தில் இந்த காட்சியை படமாக்கும்போது கியாராவுக்கு பெரிய சங்கடம் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் தற்போது அதன் கிளிம்ப்ஸ் காட்சியை பார்க்கும் போது படத்தில் இது வெளியானால் தனது இமேஜை பாதிக்கும் என நினைக்கிறாராம் கியாரா. குறிப்பாக தற்போது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ள தனக்கு குடும்ப ரீதியாக அது சில சங்கடங்களையும் கொடுக்கும் என்பதால் இந்த காட்சியை நீக்கும்படி பிடிவாதம் காட்டி வருகிறாராம். அவரது வேண்டுகோளை ஏற்று காட்சியை நீக்குவதா? இதனால் கதை ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுமா என்கிற குழப்பத்தில் இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Mohan, dubai
2026-04-15 16:24:55

பணம் என்றதும் எப்படிவேநா நடிப்பார்கள் அதை வெளியிட வேண்டாமா ஆப் ரூமுக்குள்ள nadi