சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு
ADDED : 19 hours ago
நந்தினி ரெட்டி இயக்கத்தில் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. ஆக்ஷன் கலந்த குடும்ப கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மென்மையான குணம் கொண்ட மருமகளாகவும், இன்னொரு பக்கம் ரகசிய உளவாளியாகவும் அவர் நடித்துள்ளார். சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இன்னும் 30 நாட்களில் தியேட்டருக்கு வரவுள்ள இந்த படத்தின் தசடியா என்ற முதல் பாடல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது. இந்த பாடல் கலகலப்பான திருமண சூழலில் படமாக்கப்பட்டுள்ளதாம்.