உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம்

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம்

வார்- 2 என்ற ஹிந்தி படத்தில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து நடித்த ஜூனியர் என்டிஆர், அதையடுத்து தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு திரிவிக்ரம் இயக்கும் ஒரு புராண படத்தில் நடிக்க போகிறாராம். சண்முகுடு என்று டைட்டில் வைக்க திட்டமிட்டிருக்கும் இந்த படம் பெருமாளை அடிப்படையாகக் கொண்ட புராண கதையில் உருவாகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த படம் அகில இந்திய அளவில் உருவாக இருப்பதால் இந்திய அளவில் உள்ள பல பிரபல நடிகர்களும் இதில் நடிக்கப் போகிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !