உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாகான் விழாவில் 'ராமாயணா'

சினிமாகான் விழாவில் 'ராமாயணா'


உலகின் மிகப் பெரிய திரையரங்கத் தொழில் மாநாடாக நடைபெறும் 'சினிமாகான்' மாநாடு ஏப்ரல் 13 முதல் 16 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 6000 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

உலக அளவில் வரவிருக்கும் பெரிய படங்களின் டிரைலர்கள், அறிவிப்புகள் உள்ளிட்டவை இந்த மாநாட்டில் வெளியிடப்படும். அதன் மூலம் உலக அளவிலான சினிமா வியாபாரத்தையும், ரசிகர்களையும் கவர முடியும். சினிமா குறித்த செமினார்களும், புதிய டெக்னாலஜி அறிமுகம் ஆகியவையும் இங்கு நடக்கும்.

இந்த வருட விழாவில் இந்தியத் திரையுலகத்திலிருந்து 'ராமாயணா' படக்குழுவினர் இதில் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இயக்குனர் நிதிஷ் திவாரி, யாஷ் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு படத்தின் போஸ்டர்கள் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. வேறு ஏதும் அப்டேட் கொடுப்பார்களா என்பது விரைவில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !