உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோஹினூர் வைரம் பின்னணியில் உருவாகும் படம்

கோஹினூர் வைரம் பின்னணியில் உருவாகும் படம்

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் ஆர்.இ.கஜேந்திரா கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கும் படம் 'கோகினூர்'. 'அலையோடு விளையாடு' படத்தை இயக்கிய பகவான் பாவேந்தர் இயக்கியுள்ளார். ஜீவா, நவீன், ஹிமா, தனு பிரசாத், பாவனா, ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி, தீரன் தியாகராஜன், ரவி என்ற புது முகங்கள் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது கோகினூர் வைரத்தை பற்றிய வரலாற்று பதிவுகளை மையமாக வைத்து, கற்பனை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. இப்படத்தின் ஷூட்டிங் மைசூருவில் நடத்தப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !