உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ்

2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ்

2026ம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. கடந்து போன இந்த வாரங்களில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கைந்து படங்கள் வெளியாகி நேற்று வெளியான படங்களுடன் இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 75ஐக் கடந்துள்ளது.

நேற்று, “கெஸ்ட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மனிதன் தெய்வமாகாலாம், டாக்சிலா, டிஎன் 2026” ஆகிய படங்கள் வெளியாகின.

2026ன் ஜனவரி மாதத்தில் 22 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 23 படங்களும், மார்ச் மாதத்தில் 22 படங்களும், ஏப்ரல் மாதத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 10 படங்களும் வெளியாகி உள்ளன.

கடந்த 2025ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதே எண்ணிக்கையிலான படங்கள்தான் வெளியாகி உள்ளன. கடந்த வருடம் மொத்தமாக 280 படங்கள் வெளிவந்தது. அது போலவே இந்த வருடமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !