உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2'

வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2'

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் மார்ச் 19ம் தேதி வெளியான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் வெளிநாடுகளில் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் அதிக வசூலைக் குவித்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளது.

வெளிநாடுகளில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஆமிர்கான் நடித்து வெளிவந்த 'டங்கல்' திரைப்படம் 1500 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதில் சீனாவில் மட்டும் 1300 கோடி வசூலித்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 'துரந்தர் 2' படம் உலக அளவில் 1680 கோடியை வசூலித்துள்ளது. அதில் இந்தியாவில் 1276 கோடி, வெளிநாடுகளில் 404 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் 'புஷ்பா 2' படத்தின் வசூலை முறியடித்து உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

1800 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் 'பாகுபலி 2' படத்தின் வசூலை இந்தப் படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !