ப்ரீ புக்கிங்கில் 40 லட்சம் வசூலித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'
ADDED : 6 hours ago
'டியூட்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே .சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அவர்களுடன் சீமான், யோகி பாபு, ஆனந்தராஜ், மாளவிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனிருத் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்புவெளியாகி இளவட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரீ புக்கிங் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் 40 லட்சத்துக்கு மேல் வசூலித்திருப்பதாக அப்பட வட்டாரங்களில் கூறுகிறார்கள்.