டப்பிங் செய்யப்பட்ட ஹிந்திப் படங்களில் 'ராமாயணா' புதிய சாதனை
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ஹிந்திப் படமான 'ராமாயணா', தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
டப்பிங் படம் என்று சொல்ல முடியாதபடி ஒவ்வொரு மொழிக்கேற்ற உதட்டசைவை மிகச் சரியாக 'சின்க்' செய்திருந்தனர். அதனால், அவரவர் மொழியிலேயே நேரடிப் படத்தைப் பார்க்கும் உணர்வை ரசிகர்கள் பெற்றனர். இதுவும் இந்தப் படம் மற்ற மொழிகளிலும் சிறப்பான வசூலைப் பெறக் காரணமாக அமைந்தது.
டப்பிங் செய்யப்பட்ட மொழிகளில் தெலுங்கில் 80 கோடியும், கன்னடத்தில் 80 கோடியை நெருங்கியும், தமிழ் மற்றும் மலையாளத்தில் 55 கோடிகளையும் இப்படம் கடந்துள்ளது.
இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு ஹிந்திப் படம் முதல் முறையாக 250 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் 'துரந்தர் 2' படம் சுமார் 70 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது.