சினிமாவான சிட்பண்ட் மோசடி
ADDED : 17 minutes ago
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் சிட்பண்ட் மோசடிகள் பெரிய அளவில் நடந்து அது பரபரப்பை கிளப்பியது. அந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள படம் 'மதுர மோசடி'. யுவா பிலிம்ஸ் சார்பில் எஸ்.சங்கர நாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை வி.கே.விஜய கண்ணா இயக்கியுள்ளார். பானு ஜேக்கப் இசை அமைத்துள்ளார், எஸ்.கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வையும், குடும்ப உணர்வுகளையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தவாரம் நவ., 27ல் ரிலீஸாகிறது.