உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்

தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ராம் நிதின். மேட், மேட் ஸ்குயர், ஜிகிரிஸ், படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் தெலுங்கில் தயாராகும் டைட்டில் வைக்கப்படாத படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இதில் பிரார்த்தனா நாதன், தேஜு அஸ்வினி நாயகிகளாக நடிக்கின்றனர். இதை, 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனத்தின் கே.எஸ்.சினிஷ், ரெடாக்டட் ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறது. காதலை மையமாகக் கொண்ட இப்படம் கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகிறது. இதன் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !