உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலாகும் அக்ஷய் குமாரின் சட்டை

வைரலாகும் அக்ஷய் குமாரின் சட்டை


ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பூத் பங்களா' திரைப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அக்ஷய் குமார் அணிந்து வந்திருந்த சட்டைதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் அக்ஷய் குமார் கிட்டத்தட்ட கிழிந்து போன கந்தலாடையை அணிந்து வந்தது போல அதே சமயம் இன்றைய ஜென்சி இளைஞர்கள் அணிந்து கொள்வது போலவும் வித்தியாசமான ஒரு சட்டையை அணிந்து வந்திருந்தார்.

ரசிகர்களின் கவனத்தை வான்டடாக இருக்கும் விதமாக அக்ஷய் குமார் அணிந்து வந்திருந்த இந்த சட்டை குறித்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் கூட கடைசியில் ஒரு நல்ல சட்டையை வாங்க முடியவில்லை பார்த்தீர்களா என்று கூறியுள்ளார். எப்படியோ இந்த புரமோஷன் நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என நினைத்த அக்ஷய் குமாரின் எண்ணம் ஈடேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Srividhya Srinivasan, Sohar
2026-04-08 17:26:59

எவ்ளோதான் சட்டை கிழிந்து இருந்தாலும் அவர் அதை சட்டை செய்ய மாட்டார்