உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதீப் ரங்கநாதன் போல மாறுங்கள் ; தில்ராஜுவின் ஆலோசனைக்கு சிரஞ்சீவி பட இயக்குனர் பதில்

பிரதீப் ரங்கநாதன் போல மாறுங்கள் ; தில்ராஜுவின் ஆலோசனைக்கு சிரஞ்சீவி பட இயக்குனர் பதில்


தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அனில் ரவிபுடி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் நடிப்பில் வெளியான 'மனசங்கர வர பிரசாத் காரு' என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். இந்த நிலையில் விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்ஐகே) படத்திற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனில் ரவிபுடி மற்றும் பிரபல இயக்குனர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தில் ராஜு, அனில் ரவிபுடியை பார்த்து, “நீங்களும் ஹீரோவாக நடிப்பதற்கு தகுதியான நபராக தான் இருக்கிறீர்கள்.. பிரதீப் ரங்கநாதனை போல நீங்களும் படத்தை இயக்கிக் கொண்டு இன்னொரு பக்கம் படங்களில் கதாநாயகனாக நடிக்கலாமே” என்று ஜாலியாக ஒரு ஆலோசனை கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அனில் ரவிபுடி, “நான் ஒரு இயக்குனராக என்னுடைய வேலையில் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இப்போது இருக்கும் இந்த இடமே போதும். அதேசமயம் தில் ராஜ் காரு கொடுத்தது நல்ல ஆபர் தான். ஒருவேளை அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் தயாரித்தால் அதை நான் இயக்குவேன்” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !