மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் தமிழில் நடிப்பார்களா?
அமரனுக்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் நடிக்கும் படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார். பராசக்தி படத்துக்குபின் தமிழில் அவர் நடிக்கும் படம் இது. காந்தா படத்துக்கு பின் சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் பாக்யஸ்ரீ நடிக்க உள்ளதாக தகவல்.
ஆனால், பல முன்னணி ஹீரோக்களால் விரும்பப்படும் மிருணாள் தாக்கூர் இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. அவரை நடிக்க வைக்க, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் முயற்சிப்பதாக தகவல். விரைவில் தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு என கூறப்படுகிறது.
அதேப்போல் காந்தாரா 2 ஹீரோயின் ருக்மணி வசந்ததும் பல ஹீரோக்கள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் விரும்பப்படுகிற ஹீரோயினாக இருக்கிறார். திருமணம் ஆகிவிட்டதால் ராஷ்மிகா மவுசு குறைந்துள்ளது.
தமிழில் பலர் அழைத்தும் இன்னமும் நடிக்காமல் எஸ்கேப் ஆகுற ஹீரோயின் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். இப்போதைக்கு தமிழ் சினிமாவில் மமிதா பைஜூ, கயாடு லோஹர் காட்டில்தான் மழை.