ஏப்ரல் 17ல் திரைக்கு வருகிறது மிஸ்டர் எக்ஸ்
ADDED : 8 hours ago
எப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மிஸ்டர் எக்ஸ்' . இவருடன் இணைந்து கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா, அதுல்யா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஸ்பை த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை சமீபகாலமாக திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர் முயற்சித்து வந்தார். இந்த படத்தின் வியாபாரத்தை முழுமையாக முடித்ததால் ஒரு வழியாக இந்த படத்தை வருகின்ற ஏப்ரல் 17ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.