sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

மகரம்

/

மகரம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : மகரம்
17 ஜூன் 2014 to 21 டிச 2015

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மகரம்சமுதாயத்தில் மதிப்பு மிக்க மகர ராசி அன்பர்களே!

இதுவரை இந்த 2 கிரகங்களும் திருப்தியற்ற நிலையில்தான் இருந்தன. அதாவது ராகு 10-ம் இடமான துலாமில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார். இப்போது 9-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுவார். இது சிறப்பான இடம் இல்லை என்றாலும், பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால், செயல்பாடுகளில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். கேது 4-ம் வீடான மேஷத்தில் இருந்து உடல் உபாதைகளையும், பிள்ளைகளால் தொல்லைகளையும் தந்திருக்கலாம். இந்தபிரச்னைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். அதேநேரம், கேது 3-ம் இடமான மீனத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறைஅருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். கேதுவின் பலத்தால் தெய்வ
அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும்,  சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும்  கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பிள்ளைகள் நலம் மேம்படும்.குடும்பத்தில் குதுõகலம் இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பூசல்கள், கருத்துவேறுபாடு மறையும். கோயில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையும் கிடைக்கப் பெறுவீர்கள். புத்தாடை அணிகலன்கள் வந்து சேரும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டி வரலாம்.

தொழில், வியாபாரம்: வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டியாளர்களால் இடையூறு வரத்தான் செய்யும். அவர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். குறிப்பாக கம்ப்யூட்டர், அச்சுத்துறை, பூஜைபொருட்கள், ஆன்மிகப்புத்தகங்கள் தொழில் சிறந்து விளங்கும்.

பணியாளர்கள்: தடைபட்டு வந்த பதவி உயர்வு இனி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்கள்: சிறப்பான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு போன்றவை வரும். நல்ல பணப்புழக்கமும் இருக்கும்.

அரசியல்வாதிகள்: முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.

மாணவர்கள்: நல்ல அனுகூலத்தைக் காணலாம். கடந்த ஆண்டு படித்த படிப்புக்கான முழு பலன்களும் இப்போது கிடைக்கும். நல்ல மதிப்பெண் எடுக்கலாம். போட்டிகளில் வெற்றி பெறலாம்.

விவசாயிகள்: நெல், கோதுமை, பழவகைகள், கடலை பயிர்களில் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்புகள் சாதகமாக அமையும்.

பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை உயரும்.

பரிகாரப் பாடல்!

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

கால பைரவர், துர்க்கை வழிபாடு உங்களை மேம்படுத்தும். காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம், சங்கரன்கோவில் சென்று வாருங்கள். விநாயகருக்கு திங்கள் கிழமை தோறும் அருகம்புல் மாலை  அணிவித்து வழிபடுவதன் மூலம் மனதைரியம் அதிகரிக்கும்.  திருநாகேஸ்வரம் ராகுவுக்கு  பாலபிஷேகம் செய்யுங்கள்.

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us