குருபெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள் : மகரம்
25 மே 2026 to 07 ஜூன் 2027
முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்மகரம்:
உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும்
ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.
உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்திலும், அக். 20 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், எதிர்பாராத நெருக்கடிகளும், வேலை மற்றும் தொழிலில் போராட்ட நிலையும், தேவையற்ற பிரச்னைகளும் உருவெடுக்கும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். சிலருக்கு பண நெருக்கடி, உடலில் சங்கடம், எதை எடுத்தாலும் கைகூடி வராத நிலை என்று சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், இந்த நிலை யாவும் அக். 20 முதல் அப்படியே மாறும். கடலில் தத்தளித்து வந்தவர் கரைக்கு வந்ததுபோல் வாழ்க்கையில் ஏற்பட்ட பயம் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வும், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.
உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் இடத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானமான 8 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் இருந்த போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். அக். 20 முதல் அஷ்டம குருவால் வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். வருமானம் தடைபடும். கடன் தொல்லையால் குழப்பம் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் இறங்கி சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கணவன் மனைவிக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல் போகும். தவறான நட்புகளால் உங்களுக்கிருந்த செல்வாக்கு விமர்சனத்திற்கு ஆளாகும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும்.
உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு வரும் சங்கடங்கள் எல்லாம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
மங்களக்காரகன் குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகளுக்கு ஆளாகும் ஸ்தானங்கள் சுபிட்சமடையும்.
உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12,2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் அலைச்சலும் விரய செலவுகளும் குறையும். நஷ்டம் கஷ்டம் என்ற நிலைகள் மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வருமானம் உயரும். பழைய கடன்கள் அடைபடும். செல்வாக்கு ஏற்படும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதிய வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.
அக். 20 முதல் ஜென்ம ராசியையும் 3,5 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் நிலை உயரும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். உயர் கல்வி கனவு நனவாகும். உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம்தரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.
செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பட்டம் பதவி தேடிவரும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.
எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அக். 20 முதல் 12,2,4 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.
அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்
ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும்.
பொதுப்பலன்
உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான ராகுவும், அக். 20 முதல் பாக்ய குருவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சகாய சனியும், மே 26 முதல் குருவும், தொடர்ந்து குருவின் பார்வைகளும் நன்மைகளை வழங்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பொன் பொருள் சேரும். புகழுடன் வாழும் நிலை உருவாகும்.
தொழில்
எந்த இடத்திலும் முதன்மையாக இருந்திடக் கூடிய நீங்கள், செய்து வரும் தொழிலிலும் முதல் இடத்தில் இருப்பீர்கள். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி, சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம், ஷேர் மார்க்கெட், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர் தொழில்கள் லாபம்தரும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு வேலையில் ஏற்பட்ட வழக்கு முடிவடையும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்
குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் வாழ்க்கையில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். கணவருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கல்வி
ஆத்ம காரகனின் அம்சமான உங்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். உயர் பதவி என்ற லட்சியத்துடன் படிப்பில் ஆர்வமாக இருப்பீர்கள். பொது மற்றும் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
உடல் நிலையில் தொடர்ந்து பாதிப்பு, மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியும் குணமடைய முடியவில்லையே என்று வேதனையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்யம் சீராகும்.
குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.
பரிகாரம்
ஆதி ஜெகந்நாதரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.
திருவோணம்: வெற்றிமேல் வெற்றி
மனக்காரகன் சந்திரன், கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் மன வலிமைக் கொண்டவர்கள். நினைத்ததை சாதிப்பதில் உறுதி மிக்கவர்கள். பிறந்த இடம் எத்தகையதாக இருந்தாலும் உயர்ந்த இடத்தை அடைந்திடக்கூடிய உங்களுக்கு, ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடங்களையும், உடல்நலிவையும், பிரச்னைகளையும் வழங்கிவந்த குரு, மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து, அதிசாரமாக அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக, பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மே. 26 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, செல்வம் செல்வாக்கு அந்தஸ்தினை வழங்குவதுடன் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வழங்குவார். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் இல்லாமல் போகும். இடம் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். திருமண வயதினருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன் பொருள் சேர்க்கை என வாழ்க்கை வளமாகும். பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இக்காலத்தை உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். அரசு துறையினருக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும்.
அக். 20 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் உங்கள் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். உங்களால் வளர்ந்தவர்களே உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். சிலருக்கு வம்பு வழக்கு பிரச்னை என்று நாட்கள் நகரும். உடல்நிலையிலும் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். பணவரவில் தடை உண்டாகும். என்பது பொதுப்பலனாகும். இந்த சமயத்தில் உங்கள் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், யோகமான திசா புத்தி நடந்தால் சங்கடங்கள் எதுவும் உங்களை நெருங்காமல் போகும். உங்கள் நட்சத்திராதிபதி சந்திரனுக்கு குரு நட்பானவர் என்பதுடன் தாரா பலன்படி உங்கள் நட்சத்திரத்திற்கு ஸேம தாரையான புனர்பூசத்திலும், ஸாதக தாரையான ஆயில்யத்திலும் குரு சஞ்சரிக்கும் காலங்களில் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்குவார்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
மே 26 ல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் பார்ப்பதால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதார நிலை உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும், உங்கள் செல்வாக்கு உயரும். பட்டம் பதவி தேடிவரும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் தேவைகள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பணியாளர் ஆதரவு கிடைக்கும்.
அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 12,2,4 ம் இடங்களைப் பார்ப்பதால், வீண் செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். மனதில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் தோன்றிய குழப்பம் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற முயற்சி நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.
அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்
ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும்.
பொதுப்பலன்
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், குருவின் பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும் நீங்கள் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.
தொழில்
சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனான சனி பகவான், எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சிலர் வசதியான இடத்திற்கு தொழிலை மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகனம் தயாரிப்பு மற்றும் விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வர்த்தகம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள், பால், குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஆடை ஆபரணத் தொழில்கள் லாபம் தரும்.
பணியாளர்கள்
வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும், எதிர்பார்த்த சலுகையும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலைக்காக கடல் கடந்து செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். அரசு பணியாளர்கள், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பெண்கள்
உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியத்துடன் செயல்படக்கூடிய நிலை உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என அவரவர் கனவு நனவாகும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு கூடும். வேலைப் பார்க்கும் இடத்தில் தற்போதுள்ள நிலை உயரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
கல்வி
குருப் பார்வையால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலத்திற்கும் வெளிநாட்டிற்கும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.
உடல்நிலை
அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் வெளிப்படும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப்பார்க்கும் குருவும் உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். இதுவரை இருந்த பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும்.
குடும்பம்
நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த நெருக்கடியும் போராட்டங்களும் விலகும். ஏழாம் இட குருவும், மூன்றாம் இட சனியும் உங்கள் நிலையை உயர்த்துவர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். தம்பதிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். செல்வாக்கை உயர்த்துவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பரிகாரம் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.
அவிட்டம் 1,2: செயலில் கவனம்
தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.
அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், வாழ்க்கை வளமாகும். நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறேவேறும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலை மாறும். வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்னைகளும், சிலருக்கு உடல்நிலையில் பின்னடைவும் ஏற்படும். தவறானவர்களின் பிடியில் சிக்கி பண இழப்பு அவமானம் என்பதை சந்திக்க வேண்டிவரும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும்.
அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சிலருக்கு ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம், தொழிலில் போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத்தொல்லை அதிகரிக்கும். சிலர் சட்ட சிக்கல்களையும் வம்பு வழக்குகளையும் சந்திக்க வேண்டிவரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, பிரச்னை என ஏற்படும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு நெருக்கடி, போராட்டம், பிரச்னை என்பதையெல்லாம் இல்லாமல் செய்வார். செல்வாக்கோடு உங்களை நடைபோட வைப்பார். உடல்நிலை சீராவதுடன் நீண்டநாள் கனவுகளும் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு சங்கடங்கள் வரும் போதெல்லாம் அரணாக நின்று உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.
சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்
குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் கிடைக்கும் இடங்கள் சுபிட்சமடையும்.
அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் உங்கள் ராசியையும் லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், வியாபாரம தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். தைரியமாக செயல்பட முடியும். திருமணம், குழந்தை பாக்யம், வேலை என்ற எண்ணங்கள் ஈடேறும்.
அக். 20 முதல், 12, 2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் செலவுகளும் வெட்டி அலைச்சலும் குறையும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் 10,12,2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்துவரும் தொழில் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவடையும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.
எடுத்த வேலைகள் வெற்றியாகும். சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அக். 20 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.

அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான சனியும், பாக்ய குருவும், 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருவின் பார்வைகளும், அக். 20 முதல் குருவும் நன்மைகளை வழங்குவர். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.
தொழில்
தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களுக்கு, செய்யும் தொழிலில் அக்கறை உண்டாகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தமும் பணியாளர் ஆதரவும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.
பணியாளர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும்.
பெண்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வெளியூரில் தங்கி வேலைப் பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற அவரவர் தேவைகள் பூர்த்தியாகும்.
கல்வி
உயர்வான வாழ்க்கையையும் அதிகாரமிக்க பதவியையும் விரும்பும் உங்களுக்கு, படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
பரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பாதிப்புகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகிறீர்கள்.
குடும்பம்
குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மீது அக்கறை கூடும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்
யோக நரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.