/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
'முப்பாலின் முதல்வர்' திருவள்ளுவரைப் பற்றிய பாடல் வெளியீடு
/
'முப்பாலின் முதல்வர்' திருவள்ளுவரைப் பற்றிய பாடல் வெளியீடு
'முப்பாலின் முதல்வர்' திருவள்ளுவரைப் பற்றிய பாடல் வெளியீடு
'முப்பாலின் முதல்வர்' திருவள்ளுவரைப் பற்றிய பாடல் வெளியீடு
ஜன 08, 2025

குறள் கூடல் அறக்கட்டளை செம்மொழி அறக்கட்டளை அமெரிக்கா, திருக்குறளை மையப்படுத்தி தமிழ் மொழி ,கலை, கலாச்சாரம் என உலகெங்கிலும் உள்ள பல தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழி சார்ந்த பல நிகழ்வுகளில் நடத்தி வருகிறது.
கடந்த மூன்று வருடங்களாக 'குறளுக்கோர் ஓவியம்' என்னும் உலகளாவிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி அதன் மூலம் பலரையும் பயனடைய செய்யும் நிகழ்வுகளை செவ்வனே செய்து வருகிறது. இந்த அமைப்பு.
1330 திருக்குறளையும் எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையில் வி.கே . கண்ணன் இசையமைப்பில், ஆதி கோபால் குரலில் பாடி, குறள் சூடி உமையாளின் விளக்க உறையுடன் நடனம் அமைப்புக்கு ஏற்றவாறு பாடல் வெளியீடு சென்னையில் நீதியரசர் மகாதேவன் மற்றும் வி.ஜி. சந்தோசம் தலைமையில் நடந்தது.
மாற்று ஊடக மையம் வேலம்மாள் உயர்நிலைப்பள்ளி முகப்பேர் சென்னை நடத்திய 12 ஆம் ஆண்டு வீதி விருது விழாவில் குறள் கூடல் அறக்கட்டளை, செம்மொழி அறக்கட்டளை அமெரிக்கா அமைப்பும் இணைந்து 'முப்பாலின் முதல்வர்' என்னும் தலைப்பில் திருவள்ளுவரைப் பற்றிய பாடல், வள்ளுவரை புகழ்ந்து நாடியம் நீலகண்டன் எழுத்தில், A.R. ரேஹானா இசையமைப்பில் 'குறள் இசைநாயகன் ஆதி கோபால்' குரலில் பாடி இந்த இசைத்தட்டை வெளியீடு செய்தது. இந்த பாடலில் பங்கேற்ற அனைவரையும் கௌவுரப்படுத்தி கேடயம் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து தமிழ்நாடு எங்கும் உள்ள கலை திறன் கொண்ட பாரம்பரிய கலைஞர்களை ஒன்றுபடுத்தி அவர்களின் திறமைகளை வெளிக்காட்டிய இந்த வீதி விருது விழாவில் இசை வெளியீட்டு நடத்தியதில் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை மிகவும் பெருமை அடைந்தது.
குறள் கூடல் அமைப்பின் தலைவர் மாலா கோபால், செயலாளர் ஆதி கோபால்,விழா ஒருங்கிணைப்பாளர் மீரா ஸ்ரீகாந்த் மற்றும் ஹூஸ்டன் மாநகரைச் சேர்ந்த காயத்ரி, ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த பாடலை பாடிய ஆதி கோபால் மேடையில் பார்வையாளர்களுக்காக பாட, இந்த பாடலுக்கு வினோத் நடன அமைப்பில் ஹேமா லதா ராமசாமி இதற்கு நடனம் என மிக அருமையாக அரங்கத்தில் நடைபெற, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த இசை குறள் கூட செம்மொழி பவுண்டேஷன் வலைதளத்தில் கேட்டு மகிழலாம். இதன் வீடியோ காட்சிகளை குறள் கூடல் யூட்யூப் சேனலில் நீங்கள் கண்டு மகிழலாம்.
https://youtu.be/IEjsZfNVRCc?si=ZkZyDgsz5sOuWCCO
மேலும் இந்த அமைப்பு குறளுக்கோர் ஓவியம் என்னும் நிகழ்வினால் உலகளாவிய போட்டிகளையும் நடத்தி அதில் சிறந்த ஓவியங்களுக்கு ரொக்க பரிசுகளை வழங்கி அந்த ஓவியங்கள் புத்தக வடிவில் வெளியீடு செய்யும் முயற்சி எடுத்துள்ளார்கள். சிறந்த ஓவியர்கள் இதில் கலந்து கொள்ளலாம் இதைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய குறள் கூடல் செம்மொழி பவுண்டேஷன்.org என்னும் இணைய தளத்தில் இணைந்திருங்கள்.
வள்ளுவன் புகழ் வாழ்வாங்கு வாழட்டும்!
-- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement