/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும் பரிசும்
/
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும் பரிசும்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வந்தாலே ஊரே குதூகலம் அடையும் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகமெங்கும்!
வண்ணவிளக்குகளின் அணிவரிசைகளும் அலங்காரங்களும் என இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக சந்தோஷ மாதமாகக் கொண்டாடுவோம். குழந்தைகளுக்கு விடுமுறை காலம் வேறு! இதைவிட பெற்றோருக்கு என்ன வேண்டும்! விதவிதமான உணவுகள், கேக் வகைகள், நண்பர்கள் வருகை, விருந்து என அமர்க்களப்படும். அதோடு மிகச் சிறப்பு என்னவென்றால் நம் வீடுகளுக்கு வருவார் சாண்டா!
இவ்வருடமும் எங்கள் இல்லத்திற்கு சாண்டா வந்தார், ஆசிர்வாதங்களுடன் பரிசும் தந்தார்! நண்பர் திரு பிரபாகர் என்னைத் தொலைபேசியில் அழைத்து இத்தேதியில் உங்கள் இல்லம் வரலாமா என்றதும் உடனே சரியென்றேன். அதன்படி 'HOPSA ஹவுஸ் ஆஃப் பிரேயர்ஸ் அட் சான் ஆண்டோனியோ' எனும் சர்ச் சார்ந்த பாஸ்டர் திரு டாக்டர் நரேஷ் தலைமையில் குழந்தைகளும் பெரியவர்களும் எங்கள் இல்லம் வந்து தோத்திரங்கள் சொல்லி, பிரார்த்தனைகள் செய்து எங்கள் குடும்பத்தையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் ஆசிர்வதித்துச் சென்றனர். அழகான ஓர் பரிசும் அளித்தனர்.
எவ்வளவு குளிராயினும், மழையாயினும் இவர்கள் எல்லோர் இல்லங்களும் வந்து பிரார்த்திப்பது பாராட்டுதலுக்குரியது.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement