sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பொதுப் புத்தாண்டு நிகழ்ச்சி

/

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பொதுப் புத்தாண்டு நிகழ்ச்சி

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பொதுப் புத்தாண்டு நிகழ்ச்சி

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பொதுப் புத்தாண்டு நிகழ்ச்சி


ஜன 06, 2025

Google News

ஜன 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டு என்று அழைக்கப்படும் பொதுப் புத்தாண்டின் முதல் தேதியில் உலகெங்கும் அனைத்துக் கோவில்களிலும் உற்சாகமாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அரிசோனா ஆனைமுகன் ஆலயத்திலும் இந்நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கோவில் அர்ச்சகர்கள் ஜெயந்தீஸ்வரன் பட்டர், முரளிகிருஷ்ண கந்தூரி, ஆனந்த் சர்மா ஆகியோர் மூலவராக வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு 'சுகந்த கணபதி' சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். அடியவர்கள் வீட்டிலிருந்து வந்த கரும்புகள் இருபக்கமும் தோரணமாய் நின்றன. தமிழ்நாட்டிலிருந்து விமானத்தில் பறந்துவந்த வண்ண மலர்மாலைகள் கணேசரையும், மற்ற தெய்வங்களையும் கட்டித் தழுவிப் பெரும்பேறு பெற்று மகிழ்ந்தன.


நிகழ்ச்சி ஆனைமுகன் அனுமதி நல்லாசி பெற்றவுடன், லட்சுமி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. வேதகோஷம் முழங்க, அர்ச்சகர்கள் ஆனைமுகன் திருமேனிக்கு 108 பால் குடம் அபிஷேகம் செய்தனர். சமயத்தொண்டர்கள் ரமேஷ் நடராஜன், ஸ்ரீபாஸ்கர், மகாதேவன், ஸ்ரீனி ராமமூர்த்தி சஷாங்க், தினேஷ், ஆகியோர் அபிஷேகத்திற்கு உதவிசெய்தனர். அபிஷேகப் பால் அடியவர்களுக்காக அன்னலட்சுமி உணவுக்கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


அமர், பாஸ்கர் கொல்லூரியின் உதவியுடன்செயல்பாட்டுக் குழு அடியவர் குழாமைச் சரிவர தரிசனம்செய்ய உதவியதுடன், நானூற்றம்பைதுக்கும் அதிகமான கார்களை நிறுத்துமிடத்துக்கு அனுப்பிவைத்தன. ட்ராய் என்னும் அடியவர் கோவிலையும், உணவகத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.


மௌளி சுப்பிரமணியன் கோவிலில் ராமர் ஸ்தூபம் நிறுவப்படுவது, புதுக் கட்டிடங்கள் கட்டப்படுவதுபற்றிப் பலமுறை நன்கு விளக்கினார். அதன் மாதிரிப் படங்கள் கோவிலிலும், அன்னலட்சுமி உணவகத்திலும் வைக்கப்பட்டிருந்த டிவிகளில் தொடர்ந்து காட்டப்பட்டன.


“கோவிலுக்கு வடக்கிலிருக்கும் ஒரு குன்றில் விழும் நிழல்எல்லா நாளும் மாலை 3:30லிருந்து 4:45வரை ஆனைமுகன் அமர்ந்திருப்பதைப் போன்று தோன்றும், அதுதான் கோவிலின் தனிச் சிறப்பு!” என்று சமய ஆர்வலர் மகாதேவன் விளக்கினார்.


புனித நீராட்டுக்குப் பின்னர், நன்கு அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் உற்சவர் திருமேனி தேரில் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக வந்து அருள்பாலித்தார். அடியவர்கள் உற்சாகத்துடன் இழுத்த தேரை, அஜய் முத்துக்கூரி கட்டுப்பாட்டுடன் செலுத்த உதவினார். “கணபதி பாப்பா மோரியா! ஜெய் கணேசா!” என்ற கோஷம் விண்ணை அதிரச் செய்தது. அடியவர்கள் பலர் மெய்மறந்து உற்சாகமாக ஆடினர். சூரி குன்னாலாவின் ஆட்டம் அதில் குறிப்பிடத்தக்கது.


ஊர்வலம் கோவிலுக்குள் வந்ததும், உற்சவரின் திருமேனியைச் சுமந்துவந்த அடியவர்கள் அசைந்து அசைந்து ஆட்டி,ஆடி மகிழ்ந்தனர்.


நான்கு வேதங்கள், தேவாரம் முழங்க நிவேதனமும் அருச்சனையும் நடந்தேறியது.கோவில் இயக்குநர் சிவநேசன் சால்வை போர்த்திஅர்ச்சகர்களைச் சிறப்பித்தார்.


மகிலா குழு உறுப்பினர்கள் சுஜாதா குன்னாலா, மாதவி சீலம், வசந்தி மகாதேவன், சத்யா இன்ட்டி, ராதிகா முத்துக்கூரி, நித்யா கரு, இன்னும் பலர், பழம், விபூதியைப் பிரசாதமாக வரிசையாக வந்து அருள்பெற்ற ஆயிரக்கணக்கான அடியவருக்கும் வழங்கினர்.


கோவிலில் வரலாறு காணாத அளவில் ஆயிரக் கணக்கான அடியவர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்து ஆனைமுகனின் அருளைப் பெற்றனர். அந்த வரிசை கோவில் உட்பிரகாரத்தைச் சுற்றி வெளிவந்து கார்கள் நிறுத்தும் எல்லைவரை பலநூறு மீட்டர் தொடர்ந்ததைத் காணக் கண்கள் கோடி வேண்டும்! தமிழ்நாடே அமெரிக்காவுக்கு வந்துவிட்டதாகத்தான் தோன்றியது.


ஆனைமுகனின் அருட் பிரசாதமாகக் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் அதிகமான அடியவர்களுக்கு காலை உணவும், மதிய உணவும் லட்டு, உருளைக்கிழங்குக் கறி, சாம்பார் சாதம், தயிர் சாதம், மாங்காய் ஊறுகாயுடன் டப்பாக்களில் வழங்கப்பட்டது. மதிய உணவை கோபாலகிருஷ்ணன், அருண் செல்வராஜனுடன் பல ஆர்வலர்கள் சமைத்தனர். இதற்காக அன்னதானக்குழு கரு தேனப்பன், பாஸ்கரன் மண்ணுசாமி, ஸ்ரீனிவாச குப்தா, இன்னும் பல ஆர்வலர்கள் அயராது தொண்டாற்றினர்.


இரவு வரை பக்தர்கள் ஆனைமுகனைத் தரிசித்து, வரும் ஆண்டு சிறப்பாக, செழிப்புடன், வளமுடன், அமைதியுடன் விளங்க வேண்டிச் சென்றனர். உலகில் எங்கிருந்தாலும், கோவிலும் தெய்வங்களும் அருள்புரிய அங்கு தோன்றும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிவருகிறது.


- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us