/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
தமிழக சதுரங்க வீரர் குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளரானார்
/
தமிழக சதுரங்க வீரர் குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளரானார்
தமிழக சதுரங்க வீரர் குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளரானார்
தமிழக சதுரங்க வீரர் குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளரானார்
டிச 13, 2024

சிங்கப்பூர் செந்தோசா ஈகுவாரியஸ் விடுதி நேரடி அரங்கத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கடந்த ஆண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளரான டிங் லிரனைத் தோற்கடித்து தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் உலக சதுரங்க வெற்றியாளராக வாகை சூடித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தார். ரஷ்ய சதுரங்க வீரர் கேரி காஸ்பராவ் 1985 ஆம் ஆண்டு தமது 22 ஆவது வயதில் உலக வெற்றியாளர் பட்டம் வென்றதே முந்தைய சாதனை. கிட்டத் தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு குகேஷ் அதனை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
நான்கு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இறுதிச் சுற்றான பதினான்காம் ஆட்டத்தில் 18 வயது குகேஷ் மகத்தான சாதனை புரிந்ததை அரங்கம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது. பத்தாண்டு காலமாக உலகச் சதுரங்க வெற்றியாளராவதையே பிரதான இலக்காகக் கொண்டிருந்ததாகக் கூறிய குகேஷ் தமது கனவு ஈடேறியதில் குதூகலிப்பதாகக் கூறினார். டிசம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறும் விழாவில் குகேஷ் பட்டம் பெறுவார்.வெற்றிப் பரிசாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கப்படவுள்ளது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement