/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய மஹா கும்பாபிஷேக தொடக்க விழா கோலாகலம்
/
ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய மஹா கும்பாபிஷேக தொடக்க விழா கோலாகலம்
ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய மஹா கும்பாபிஷேக தொடக்க விழா கோலாகலம்
ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய மஹா கும்பாபிஷேக தொடக்க விழா கோலாகலம்
டிச 12, 2024

ஒப்பற்ற மத நல்லிணக்கத்திற்கு சிங்கப்பூர் எனில் புனித சமய நல்லிணக்கச் சின்னமாக விளங்குவது மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயமாகும். ஆம். சைவ, வைணவ ஆகம வழிபாடுகளை நிகழ்த்தி சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்து பக்தப் பெருமக்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துவதில் தனித்துவமாக விளங்கும் ஆலயமான ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய மஹா கும்பாபிஷேகத் துவக்க விழா டிசம்பர் 11 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக முன்னோட்டமாக ஜனவரி 27 ஆம் தேதி வரை 48 கலசங்கள் பிரதிஷ்டை செய்து பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இந்த நாட்களில் காலையும் மாலையும் விக்னேஸ்வர பூஜை, அபிஷேகம், புண்யாகவாஜனம், கலச யந்திர பூஜை, ஜபம், ஹோமம், மகா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் என மிகச் சிறப்பாக நடைபெற ஆலய மேலாண்மைக்குழுத் தலைவர் சுரேஷ்குமார் குழு ஏற்பாடு செய்துள்ளது.
சிவாச்சாரியார்களின் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை முதலானவை நிறைவு பெற மகா தீபாராதனை நடைபெற்றமை மெய்சிலிர்க்க வைத்தது. மோகன ராகமும், ரூபக தாளமும் சமர்ப்பிக்கப்பட்ட போது பக்தர்கள் உருக்கத்தோடு வழிபட்டனர். இந்தியாவிலிருந்து இவ்வழிபாட்டிற்கென விசேஷமாக வருகை புரிந்துள்ள சர்வசாதகம் கும்பாபிஷேக சாம்ராட் பூஜைகளை வழிநடத்தினார். தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் பூஜைகளைத் தமக்கே உரிய அர்ப்பணிப்போடு நடத்த இதர சிவாச்சாரியார்களின் ஒருங்கிணைப்பு வியக்க வைத்தது.
நிறைவாகப் பங்கேற்ற பக்தப் பெருமக்களுக்கு அருட்பிரசாதத்தோடு அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலயம் முழுவதும் அருட்பிரகாசத்திலும் மின்னொளிப் பிரகாசத்திலும் ஜொலித்துக் கொண்டுள்ளது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement