/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
காரைக்கால் அம்மையார் காட்டும் வழி - நூல் வெளியீடு கோலாகலம்
/
காரைக்கால் அம்மையார் காட்டும் வழி - நூல் வெளியீடு கோலாகலம்
காரைக்கால் அம்மையார் காட்டும் வழி - நூல் வெளியீடு கோலாகலம்
காரைக்கால் அம்மையார் காட்டும் வழி - நூல் வெளியீடு கோலாகலம்
டிச 09, 2024

நூல் வெளியீடு, பாராயணம், சிறப்புச் சொற்பொழிவு, திருமுறை வழிபாடு, தேவாரம் பாடுதல் என பல்சுவை அங்கங்கள் பரிணமிக்க தெலுக் புலாய் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயமும் அதிகை தமிழ் சைவக் கல்வி நிலையமும் இணைந்து டிசம்பர் 8 ஆம் நாள் நடத்திய சிங்கப்பூர் சைவ சித்தாந்தத் தலைவரும் சிங்கப்பூர் வானொலி மேனாள் மூத்த ஒலி பரப்பாளரும், ஆன்மிக தன்முனைப்புச் சொற்பொழிவாளருமான முனைவர் மீனாட்சி சபாபதி எழுதிய “ காரைக்கால் அம்மையார் காட்டும் வழி “ நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய சமயப் பிரிவுத் தலைவர் சந்திரன் வரவேற்புரை ஆற்ற, மலேசிய சைவ சமயப் பேரவை, சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரிய நிறுவநர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார். ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் சிவகுமார் சோதிநாதன் இவருக்குப் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தார். சிங்கப்பூர் தாரகை இலக்கிய வட்டத் தலைவியும் சிங்கப்பூர் முஸ்லிம் லீக் வளர்பிறை மகளிர் வட்டத் தலைவியுமான அப்த்துல் லத்தீப் மஹ்ஜபீன் நூலினைப் பக்கத்திற்குப் பக்கம் விளக்கமளித்து நளினத்தோடும் நகைச்சுவையோடும் நூலாய்வு செய்து பலத்த கரவொலி பெற்றார். இவருக்குப் பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த சாந்தி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
நிகழ்வின் முத்தாய்ப்பு நிகழ்வாக நூல் வெளியீடு கண்டது. நூலாசிரியர் முனைவர் மீனாட்சி சபாபதிக்கு வழக்கறிஞர் புனிதமலர் சிவகுமாரன் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். முதல் நூலை சிறப்பு விருந்தினர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், சிவகுமார் சோதிநாதன், சந்திரன் சோம சுந்தரம் ஆகியோர் பெற்றனர். தொழிலதிபர் அபிலாஷ் இவர்கட்குச் சிறப்புச் செய்தார். தொடர்ந்து சிங்கை இசக்கி செல்வி பெற்றார்.
“ நம்மைப் பேணும் அம்மை காண் “ எனும் தலைப்பில் திருவாடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பேராசிரியை சசிப்பிரியா பழனிக்குமார் தமக்கே உரிய பாணியில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திப் பெரும் வரவேற்பைப் பெற்றார். நூலாசிரியர் முனைவர் மீனாட்சி சபாபதி இந்நூல் எழுதுவதற்குத் தமக்குத் துணை நின்ற இறையருளுக்குக் காணிக்கையாக்கிச் சிறந்ததொரு ஏற்புரை ஆற்றினார். ஆலயம் நிரம்பி வழிந்த பக்தப் பெருமக்கள் நூலினைப் பெற்று மகிழ்ந்தனர். ஆலய சமயப் பிரிவுத் தலைவர் சந்திரன் நன்றி நவில நிகழ்வு நிறைவு கண்டது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement