/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா கோலாகலம்
டிச 14, 2024

கருணையே வடிவாகி அருளாட்சி புரிந்து வரும் ஸ்ரீ மூகாம்பிகை, மேன்மை கொள் சைவ நீதியும், வைகானஸ ஆஹமத் தத்துவமும் செழித்தோங்கிச் சுடர் விட்டுச் சமய நல்லிணக்கச் சின்னமாக பிரகாசிக்கும் சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அழகே வடிவான முருகப் பெருமானுக்கு காலையில் பதினெண் வகையான வாசனாதித் திரவியங்களால், தலைமை அர்ச்சகர் சர்வ சாதக ஆகமப் பிரவீணா சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் அபிஷேகம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியதோடு பக்தப் பெருமக்களை “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ....வீர வேல் முருகனுக்கு அரோகரா என உருக்கத்தோடு சரண கோஷமிட வைத்தது.
முத்தாய்ப்பு நிகழ்வாக மாலையில் நித்திய பூஜையைத் தொடர்ந்து தீபமேற்றும் விழா நடைபெற்றது. மங்கல மகளிர் உள்ளிட்ட ஏராளமானோர் மங்கள இசை முழங்க தீபங்களை ஏந்தி ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தமை மெய்சிலிர்க்க வைத்தது. நிறைவு நிகழ்ச்சியாக சொக்கப் பனை ஏற்றி கொழுந்து விட்டுப் பிரகாசிக்கும் போதும் அரோகரா சரண கோஷம் முழங்கியது. ஆலயக் கும்பாபிஷேகத்தை ஒட்டி 48 நாட்கள் நடைபெறும் கலச யந்திர பூஜை, ஜபம், ஹோமம், மகா தீபாராதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பங்கேற்ற பக்தப் பெருமக்களுக்கு அருட்பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. சுரேஷ் குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement