/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் பள்ளிக்கூடங்களில் யோகா நிகழ்ச்சி
/
கத்தார் பள்ளிக்கூடங்களில் யோகா நிகழ்ச்சி
ஜூன் 14, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய பள்ளிக்கூடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த யோகா நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் எளிய வகை யோகாசனங்களை செய்து காண்பிக்க அதனை பின்பற்றி மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் யோகாவை மேற்கொண்டனர்.
யோகா செய்வதன் மூலம் உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும் புத்துணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement