/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
/
பஹ்ரைனில் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
டிச 22, 2024

பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அல் ஹிதாயா அல் கலீஃபா மேல்நிலைப் பள்ளிக்கூட மாணவர்கள் 'தூதரகத்தை பார்வையிடுவோம்' என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பார்வையிட்டனர்.
'தூதரகத்தை பார்வையிடுவோம்' என்ற சிறப்பு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பஹ்ரைன் நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிக்கூட மாணவ, மாணவியர் இந்திய தூதரகத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தூதரகத்தை பார்வையிட வந்த அரபு மாணவர்களுக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் தூதரகத்தின் பணிகள் குறித்து அவர்களிடம் விவரித்தனர்.
மேலும் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் உடன் மாணவர்கள் கலந்துரையாடல் செய்தனர். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். இந்த சந்திப்பின் போது தூதரக அதிகாரிகள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement