/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
IWF சவூதி அரேபியா யான்பு மண்டல செயற்குழு
/
IWF சவூதி அரேபியா யான்பு மண்டல செயற்குழு
டிச 22, 2024

IWF யான்பு மண்டலத்தின் சார்பில் மண்டல செயற்குழு, மண்டலத் தலைவர் பந்தநல்லூர் சாஜஹான் தலைமையில், டயோட்டா கிளைச் செயாளர் இலியாஸ் கிராஅத்தோடு தொடங்கியது. எல் சுவைதி கிளையின் செயலாளர் சென்னை இப்ராஹிம் ராஃபி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அடியற்கை சேக்தாவுது 2025 க்கான IWF யான்பு மண்டல செயற்திட்டங்கள் குறித்து உரையாற்றினார். பலத் கிளைத் தலைவர் தஞ்சை சாஜஹான் அமைப்பாய் திரள்வதன் அவசியம் குறித்து உரையாற்றினார். எல் சுவைதி கிளையின் தலைவர் சென்னை வாஜித் பாஷா பேசினார். மண்டல தலைவர் பந்தநல்லூர் சாஜஹான் IWF சார்பில் யான்பு மற்றும் சவூதி அரேபியாவில் மற்ற மண்டலங்களில் நடைபெற்ற கடந்த ஓராண்டு பணிகளை விளக்கி உரை நிகழ்த்தினார்.
தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு வாரியம் (NRT) குறித்த சந்தேகங்களுக்கும், அமைப்பு சார்ந்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் மண்டல IWF செயலாளர் உடன்குடி அபுபக்கர் சித்திக் பதிலளித்தார். சவூதி அரேபியா IWF சார்பில் தயாரிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து அப்துல் சமதின் சவூதி அரேபியா பயணம் புத்தகமும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல நிர்வாகிகள் மற்றும் மண்டல செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மண்டல துணைத்தலைவர் ஏர்வாடி அன்சாரியின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.
- தினமலர் வாசகர் ஷாஜஹான் யான்பு
Advertisement