/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தாவில் செங்கடல் தமிழ்ச் சமூக உழைப்பாளர் தினம்
/
ஜெத்தாவில் செங்கடல் தமிழ்ச் சமூக உழைப்பாளர் தினம்
மே 05, 2025

ஜெத்தாவில் செங்கடல் தமிழ்ச் சமூகம் ஷரஃபியா சமர் ரோஸ் அரங்கத்தில் செங்கடல் தமிழ்ச் சமூகம், தொழிலாளர் தினத்தை கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இசை நிகழ்ச்சியாக நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்து, இந்திய மற்றும் சவூதி தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு மரியாதை செய்த பின்னர் பெஹல்காமில் இறந்த இந்தியச் சொந்தங்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மிகச்சிறந்த மருத்துவ மற்றும் உடல்நலம் குறித்து ஆலோசனையை மருத்துவர் ரேவதி பாலுவும், தொழிலாளர் தினம் மற்றும் உழைப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையினை Dr ஹேமலதா மகாலிங்கமும் ஆகியோர் வழங்க, அவர்களைச் செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் குடும்பத்தின் சார்பில் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்து வருகையை அங்கீகரித்து மரியாதை செய்து வரவேற்றனர். மிகச்சிறப்பான விழிப்புணர்வுகளை படக்காட்சிகளுடன் மனதில் பதியும்படி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடும் உழைப்பால் உயர்ந்து இன்று தொழிலதிபதியாக உள்ள டேஸ்டி ஃபுட் கேட்டரிங் நிறுவனத்தின் சிக்கந்தரைப் பெருமைப்படுத்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். அதே போல் பாடகர் நூஹ் பீமாபள்ளிக்கும் சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியில் 70 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கு கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மாணாக்கர்கள் அனைவருக்கும் அவர்கள் பெற்றோர்களையும் அழைத்து சான்றிதழ்கள், மெடல்கள் அணிவித்து மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக ஆசிரியை சங்கீதா மோகனின் மகள் திஷா மோகன் குர்ஆன் கிராத் ஓதி மக்களின் பாராட்டைப் பெற்றார்.
இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை பாடல்கள், இசை என மக்களை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சியில் ஜெத்தா தமிழ்ச் சங்க ரமண சங்கர், பேரரசு, அஹமது பாஷா, மெப்கோ அமைப்பின் லூனா அன்வர், நூருல் அமீன், ரஃபிக் ஜாபர், செந்தமிழ் நல மன்றத்தின் ஷெரீப், ஜெத்தா தமிழ் சொல்வேந்தர் ஆதம் அபுல் ஹஸன், பாடகர் அப்துல் லத்தீப், பட்டிமன்றப் பேச்சாளர் ராமச்சந்திரன், மாஸ் மீடியா ஹஸன் கொண்டாட்டி, லுலு மீடியா அமைப்பினர், சி.எம்.அஹமது சாயப், திரைப்பட பின்னணி பாடகி மும்தாஜ், ஜெத்தா மியூசிக் லவ்வர்ஸ் நவாஸ் பீமா பள்ளி, ரம்யா ப்ரூஸ், சமீர், சிலோன் மியூசிக் குரூப்பின் ஃபைன், சொமன், ரஜாக், முஸ்தபா, இந்தியப் பன்னாட்டுப் பள்ளி ஆசிரியர் குரு, ஆசிரியைகள் சங்கீதா மோகன், விசாலாட்சி, ஏகப்பன், ஜெயக்குமார், சசிகுமார், கேரள பள்ளி ஆசிரியையும் நடன அமைப்பாளருமான ஸ்ரீதா அருண்குமார், மியூசிக் லவ்வர்ஸ் சிமி, பேகம் கதிஜா மற்றும் தமிழ்ப் பாடகர்கள் உட்பட மலையாளப் பாடகர்கள் கலந்து கொண்டு தமிழ், மலையாளம் மற்றும் இந்தி பாடல்களைப் பாடினர்.
ஜெத்தா இந்தியப் பன்னாட்டுப் பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஃபர்ஹான் உட்பட பள்ளி மாணாக்கர்களுக்கு மெடல்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகி சாதிக் தொழிலாளர் தின கவிதை வாசித்தார்.
நிகழ்ச்சியை தஞ்சை லயன் ஜாஹிர் ஒருங்கிணைத்து தொகுத்த வழிநடத்த செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் குலாம் மைதீன், ஜொஹ்ரா குலாம், நரேஷ், பூஜா நரேஷ், சாதிக், இர்ஃபான், ராயிஸ், அப்பாஸ், ஜூல்பி, ஃபரூக், சகுபர் வாய்ஸ் சாதிக், இலக்கியா மற்றும் நூஹ் பீமா பள்ளி ஆகியோர் ஒருங்கிணைத்து மக்களை மகிழ்ச்சி படுத்தினர். முன்னதாக மாலை ஸ்நாக்ஸ் மற்றும் தேநீரும் இரவு உணவும் வழங்கி மே தின உழைப்பாளர் தினத்தை சிறப்பாக நடத்தினர்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement