sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ரியாத் தமிழ்ச் சங்க "முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி"

/

ரியாத் தமிழ்ச் சங்க "முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி"

ரியாத் தமிழ்ச் சங்க "முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி"

ரியாத் தமிழ்ச் சங்க "முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி"


மே 05, 2025

Google News

மே 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய 'முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி' சிறப்பாக நடைபெற்றது. தமிழின் வளத்திற்கும், தமிழர் நலத்திற்கும் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து சமூக சேவையில் முன்னணி வகித்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கம், “பாதுகாப்பே முக்கியம்” என்ற நோக்கத்துடன், ரியாத் வாழ் தமிழ் மக்களுக்காக 'முதலுதவி விழிப்புணர்வு' நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி கடவுள் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. ஆதிகா ஆரிப் குர்ஆனில் இருந்து இறை வசனங்களை ஓதி மொழி பெயர்த்தார். பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆரிப் அப்துல் சலாமின் சிறப்பான தொகுப்பில் இந்த 'முதலுதவி விழிப்புணர்வு' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. அவர் தனது முன்னுரையில், 'அவசர நிலைகள் (Emergency Situations) எப்படி எதிர்கொள்வது, அதைப் பற்றி தெரிந்துகொள்வது ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும். முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒரு நிகழ்வல்ல; இது ஒரு வாழ்க்கைத் திறன் கல்வி' என்பதை வலியுறுத்தினார்.


ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஹைதர் அலி தலைமை உரையில் “பாதுகாப்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை கோட்பாடாகும். இத்தகைய அடிப்படை விழிப்புணர்வு கல்வி உன்னதமான உயிர்களை காக்க உதவும்” என வலியுறுத்தினார்.


நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, பாதுகாப்பு மற்றும் அபாய மேலாண்மை துறை (Safety and Risk Management) இல் அனுபவமுள்ள நிபுணராக விளங்கும் Euro Gulf Safety Consultant - பரத், 'முதலுதவி, அவசர கால பாதுகாப்பு நடைமுறைகள், CPR, தீக்காயங்கள், முறிவுகள், மூச்சுத் திணறல்' போன்ற அவசர நிலைகளைக் கையாள்வதற்கான எளிய வழிமுறைகள் குறித்து விரிவாகவும், நடைமுறை பயிற்சி அடிப்படையில் விளக்கினார்.


பங்கேற்பாளர்கள், தங்கள் நேரில் கலந்து கொண்டு மாதிரி சூழல்களில் பயிற்சி பெற்றதன் மூலம், அவசர நிலைகள் தைரியமாக எதிர்கொள்ளும் நம்பிக்கையை பெற்றதாக கருத்து தெரிவித்தனர்.


ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஹைதர் அலி, துணைத் தலைவர் ஜாபர், செயலாளர் சரவணன், இணைச் செயலாளர் இர்சாத் இணைந்து பரத்துக்கு பாராட்டு கேடயம் வழங்கி கௌரவித்தனர்.


செயலாளர் சரவணன் நன்றியுரையில், 'நாமும் நல்லவைகளுக்காக நம்மால் இயன்ற சமூக பங்களிப்பாற்று முன்வர வேண்டும் என்றும், மேலும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி' தெரிவித்து கொண்டார். நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.


இந்நிகழ்ச்சியில் ரியாத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- நமது செய்தியாளர் M Siraj



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us