/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் முன்னாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு
/
துபாயில் முன்னாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு
துபாயில் முன்னாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு
துபாயில் முன்னாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு
செப் 02, 2025

துபாய் : தாய்ச் சபை இந்திய பூனியன் முஸ்லீம் லீக் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் பேரவையின் மேனாள் பொருளாளர், மாநில துணைச் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானிக்கு வரவேற்பு நிகழ்வு துபை ரீஃப் தேரா ஹோட்டலில் 29-8-25 வெள்ளி அன்று ஷார்ஜா மண்டல செயலாளர் ஆடிட்டர் அஞ்சுக் கோட்டை அப்துல் ரசாக் தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக துபை மண்டல துணை செயலாளர் லால்பேட்டை கிஃபாயத்துல்லா கிராஅத் ஒதினர்.
பேரவையின் துணை பொதுச்செயலாளர் வழுத்தூர் மக்கி ஃபைசல் வரவேற்புரை ஆற்றினார்.பேரவையின் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் MSA.பரக்கத் அலி துவக்க உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேரவையின் பொருளாளர் முகமது அப்பாஸ் மிஸ்பாஹி, மின்னணு ஊடகத்துறை செயலாளர் அகமது கபீர் ரிபாயி , ஊடகத்துறை முதுவை ஹிதாயத் , அஜ்மான் மண்டல செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா, கீழக்கரை பஹ்ருல் பயாஸ், கொள்கை பரப்பு செயலாளர் கவிஞர் வழுத்தூர் முகைதீன் பாஷா, மக்கள் தொடர்பு துணைச் செயலாளர் பசுபதி கோயில் சாதிக், தேரா பஜார் பகுதி செயலாளர் பனைக்குளம் இப்ராஹிம், துணைச் செயலாளர் லால்பேட்டை நூருல் அமீன், ஹோர்அல் அன்ஸ், அல் முத்தினா பகுதி துணைச் செயலாளர் வன்னாங்குண்டு தைபுல்லா , முஷாஹிர் , ஏர்வாடி முஹம்மது முகைதீன், மற்றும் பைசுல் இஸ்லாம், நிசாமுதீன், அத்னான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
லால்பேட்டை ஜமாத்தின் செயலாளர் ஹாஜா , முஹம்மது மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மேனாள் பொருளாளருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாநில துணைச் செயலாளர் லால்பேட்டை அப்துர் ரஹ்மான் ரப்பானி சிறப்புரை ஆற்றினார்.
தாய் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வரலாற்று சிறப்பு நிகழ்வான புது டெல்லி காயிதே மில்லத் சென்டர் அமைத்துத் தந்த தாய் சபையின் முன்னோடி தலைவர்களுக்கு வாழ்த்துக்களும் துவாக்களும் தெரிவிக்கப்பட்டது.
பேரவையின் துபை மண்டல செயலாளர் மற்றும் துணைப் பொருளாளர் கீழக்கரை முகம்மது காமில் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
--- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement