/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது வழங்கல்
/
பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது வழங்கல்
செப் 01, 2025

மனாமா: வளை குடாநாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் சமூகசேவகருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பஹ்ரைன் நாட்டில் பொது சேவை செய்து வரும், சமூக சேவகர் மற்றும் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின்நிறுவனர் சையத் ஹனீஃப். இவர் ஆற்றி வரும் பணிகளுக்கு கவுரவம் கிட்டி உள்ளது.
வெளிநாட்டினர்மற்றும் பஹ்ரைன் சமூகத்திற்கு செய்து வரும் சிறந்த சமூக அர்ப்பணிப்புகளுக்கான பாராட்டு விருதை, பஹ்ரைன் நாட்டு வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவரும், பார்லி உறுப்பினருமான டாக்டர் மரியம் அல் தாயனிடமிருந்து, சையத் ஹனீப் பெற்றுக்கொண்டார்.
ஈசா டவுன் பகுதியிலுள்ள ஆயிஷா அல் மொய்யத் மண்டபத்தில் விழா நடைபெற்றது.
நமது செய்தியாளர் காஹிலா.
Advertisement