/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்

செப் 02, 2025

துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார்.
உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.
சிட்னி மாரத்தான் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற செய்யது அலிக்கு ஆஸ்திரேலியா மற்றும் அமீரக இந்தியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
--- நமது செய் தியாளர் காஹிலா .
Advertisement