/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத்தில் களை கட்டிய கல்வி வழிகாட்டி முகாம்
/
ரியாத்தில் களை கட்டிய கல்வி வழிகாட்டி முகாம்
மே 19, 2025

உலகை மாற்றுவதற்கு உங்கள் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் கல்வியே , உலகை மட்டுமல்லாமல் ஒவ்வொருவரையும் மாற்ற கூடிய கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல விழி அமைப்பு நடத்திய 2025 - ஆம் ஆண்டிற்கான நேரடியான மூன்றாவது கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ரியாத் சுலை இஸ்திராஹ்வில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நியூ செனையா கிளை தலைவர் மெளலவி அபுஹுரைரா கிராத் ஓத , மண்டல துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மி வரவேற்புரை நிகழ்த்த, மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது, இதுபோன்ற கல்வி வழிகாட்டி நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும் இது போன்ற நிகழ்வுகள் வைர வியாபாரத்திற்கு ஒப்பான மதிப்பு மிக்கவை, கலை நிகழ்ச்சிகளுக்கு காட்டும் ஆர்வம் கல்வி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் காட்டாது போனாலும் நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிக் கொண்டே இருப்போம் என்ற பொருளில் தலைமை உரையாற்றினார்.
நிகழ்வில் முத்தாய்ப்பாக ஆசிரியர் பக்ருதீன், தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துறை சார்ந்த படிப்புகளை எடுத்து கூறி அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்க, மண்டல விழி துணைச் செயலாளர் முனைவர் மீரான், சவூதி அரேபியாவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசித்து வரும் சமூக ஆர்வலர் மற்றும் தனியார் கல்வி வழிகாட்டி நிறுவனத்தின் உரிமையாளரான சகோ.லண்டன் பைசல், இந்தியாவிலிருந்து லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று மேற்படிப்புகளுக்கு செல்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி அதற்கு தமிழக அரசு வழங்கி வரும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வை மண்டல விழி செயலாளர் ஷேக் அப்துல்லா தொகுத்து வழங்க, நிறைவாக மண்டல துணை செயலாளர் ஆர்.எஸ் மங்கலம் சைபுல்லாஹ் நன்றியுரையாற்றினார். இந்த கல்வி வழிகாட்டு முகாமில் பெருந்திரளான பெற்றோர்களும் , மாணவக் கண்மணிகளும் கலந்து கொண்டு, தங்களுக்கு எழுந்திருந்த சந்தேகங்களை கேட்டறிந்து, தெளிவு பெற்றார்கள்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement