/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் பிரமாண்ட கர்நாடக சேர்ந்திசை நிகழ்ச்சி
/
துபாயில் பிரமாண்ட கர்நாடக சேர்ந்திசை நிகழ்ச்சி
மே 19, 2025

துபாய்: துபாயில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கி 9 மணி வரை சாஸ்திரிய இசைகுருமார்களும் பாரம்பரிய இசை வழிகாட்டிகளும் இணைந்து டீம் மோஹனா குழுவினரின் ஏற்பாட்டில் ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைத்தனர்.
துபாய் ஊத் மைத்தா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் அரங்கின் மேடையில் அமைக்கப்பட்ட உயரம் தொட்ட படிகளில், நிகழ்ச்சி துவங்கிய நொடியில் திரைச்சீலை உயர்ந்ததும், கண்ணை கவரும் வண்ண உடைகள் அணிந்து சிறு குழந்தைகளில் 7 வயது முதல் 70 வயது முதியவர் வரை வரிசையில் அழகாக அமர்ந்திருந்தது காண்போரின் கண்கள் நிறைந்து அபார மகிழ்வை தந்தது.
மும்மூர்த்திகளில் ஒருவரான இசை மேதை தியாகராஜரின் கிருதிகளை 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்று தந்து அவர்களை ஒரே மேடையில் அமர வைத்து ஒருமித்த குரலில் பாடச் செய்து பரவசமூட்டினர்.
கர்நாடக இசை விற்பன்னர்களான மல்லாதி சகோதரர்கள் வழிகாட்டுதலில் ஷோபிலு சப்தஸ்வரா மற்றும் ராகசுதா ரச சேர்ந்திசையும், விதூஷி கன்யாகுமரி அம்மாவின் பயிற்சியில் ஏழுக்கும் மேற்பட்டவகையான இசை கருவிகளை 17கலைஞர்கள் வாசித்த வாத்ய வ்ருந்தா நிகழ்ச்சியும் ஒரு இசை மழையை பொழிந்தது எனலாம்.
70 க்கும் மேற்பட்ட பெண்கள் பகவத் கீதை ஓதி சிறப்பு சேர்த்தனர். மேலும், இந்தியாவிலிருந்து பாவனி ஸ்ரீகாந்த், பிரணவ் ஆர்காட், ஷிவ் தேஜா, சியாம் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ராஜ்குமார் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
நிகழ்வினை ஆனந்த் மற்றும் தீபா வினய் தொகுத்து வழங்க, அனுஷா, ராதா, ஷீலா, வித்யா, நித்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ஆசிரியைகளுக்கும் புரவலர்களுக்கு நினைவுசின்னம் மற்றும் அன்பளிப்புகளும் அளித்து அனைவரையும் பாராட்டி நன்றி கூறி மகிழ்வித்தோம் என தகவல் கூறினார் நிகழ்ச்சி இயக்குனர் ராதிகா ஆனந்த்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement