/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாணவர்
/
10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாணவர்
10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாணவர்
10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாணவர்
மே 19, 2025

ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்தியா இண்டர்னேஷனல் பள்ளிக்கூடத்தில் சி.பி.எஸ்.இ. பிரிவில் மதுரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது ரேஹான் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவர் சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் 98.2 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கூட அளவில் முதலிடம் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு : ஆங்கிலம் 99, தமிழ் 98, கணக்கு 98, அறிவியல் 98, தகவல் தொழில்நுட்பம் 98 ஆகும். இந்த மாணவரின் தந்தை முஹம்மது ரிஸ்வான் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தாயார் சபீனா பேகம் இல்லதரசி.
தமிழகத்தைச் சேர்ந்த வர்ஷன் 97.6 சதவீதமும், ரிபா ரஃபிக் 97.6 சதவீதம் பெற்று இந்த பள்ளிக்கூடத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement