/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்
/
ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்
ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்
ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்
ஜூன் 09, 2025

ஷார்ஜா :ஷார்ஜா ரத்தமாற்று மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் ரத்ததானம் மற்றும் ரத்த பிளேட்லெட்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி கிரீன் குளோப் அமைப்பின் தலைவி டாக்டர் ஜாஸ்மின் அபுபக்கர் தலைமை வகித்தார். ஆராய்ச்சி மையத்தின் டாக்டர்களுக்கு அஜ்மான் புளூ ஸ்டார் பில்டிங் மெட்டீரியல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பசுபதி கோவில் முஹம்மது ரஃபீக் பூங்கொத்து வழங்கி கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், தமிழ் Buzz துபாய்-யின் இணை நிறுவனர் ஷாஹுல் ஹமீது, அல்பாரிஸ் பிரின்டிங் மெட்டீரியல் டிரேடிங் உரிமையாளர் ரபீக் அகமது , சமூக ஆர்வலர் முஹம்மது ரஃபி, நஸீர், துபாய் மைந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்ததானம் வழங்கிய சித்தீக் அஹமது, சில்மியா பானு, இப்ராஹிம், ஹசன் உள்ளிட்ட பலருக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பங்கேற்ற அனைவருக்கும் உணவு, ஜூஸ் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை கிரீன் குளோப் அமைப்பின் நிர்வாகக் குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement