/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தாவில் அம்பாசடர் டாலன்ட் அகாடமி பழைய மாணவர்கள் சந்திப்பு
/
ஜெத்தாவில் அம்பாசடர் டாலன்ட் அகாடமி பழைய மாணவர்கள் சந்திப்பு
ஜெத்தாவில் அம்பாசடர் டாலன்ட் அகாடமி பழைய மாணவர்கள் சந்திப்பு
ஜெத்தாவில் அம்பாசடர் டாலன்ட் அகாடமி பழைய மாணவர்கள் சந்திப்பு
மே 12, 2025

ஜெத்தா: மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி மையமாக விளங்கும் அம்பாசடர் டாலன்ட் அகாடமி (ATA), அதன் பழைய மாணவர்களுக்கான சிறப்புச் சந்திப்பை அண்மையில் சிறப்பாக நடத்தியது.
அரையாண்டுகளாக ஜெத்தாவில் உள்ள இந்திய சமுதாயத்திற்கு பயிற்சிகள் வழங்கி வரும் ATA, நுண்ணறிவுடன் கூடிய தொழில்முறை பயிற்சிகளை வழங்குவதில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. இதில் பயிற்சி பெற்ற பழைய மாணவர்களும், புதிதாக சேர விரும்பும் ஆர்வலர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். தொழில்முறை திறன் மேம்பாடு, தகவல் பரிமாற்றம், மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அகாடமியின் முக்கிய பயிற்றுவிப்பாளராக நசீர் வாவாக்குஞ் தலைமை வகித்தார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பமும் பிற விஞ்ஞான முன்னேற்றங்களும் வேகமாக வளர்ந்து வரும் இந்நாளில் தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியுடன் கூடிய திறன் வளர்ச்சியும் அடையவேண்டும் எனக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
கோர்டினேட்டர் ஷம்சுதீன் கண்ணூர் வரவேற்பு உரையையும், பொறியாளர் சைத் அன்வர் சாதத் நன்றியுரையையும் வழங்கினர். நௌஷாத் தாழத்துவீட்டில், அபூபக்கர் கோழிக்கோடு, மொய்தீன், நாசர் வேங்கரா, அஷ்ரஃப் பட்டாரி, அப்துல் நாசர் கோழிக்கோடு ஆகியோர் உரையாற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.
ATA பழைய மாணவர்கள் நடத்திய இசைநிகழ்ச்சி சந்திப்புக்கு சிறப்பூட்டியது. நிகழ்வின் இறுதியில், ATA உலகளாவிய ஒருங்கிணைப்பாளரும், MEK 7 குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முஸ்தஃபா K.T. பெருவள்ளூரை கௌரவிப்பது நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியது. முஜீப் பாறக்கல் மற்றும் ராபி நிலம்பூர் ஆகியோர் .நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement