/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
லண்டனில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
/
லண்டனில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
ஜூன் 16, 2025

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரில் தமிழர்களின் முற்றிய ஞானத்தின் அடையாளமாகத் திகழும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா இனிதே நடைபெற்றது.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி ஜி சந்தோசம் கொடையாக வழங்கியுள்ள 183 வது திருவள்ளுவர் சிலையினை ஆக்ஸ்போர்ட் மாநகரத்தின் கவுன்சிலர்கள் ஸ் ரீபன் வூட் , சூசான் அன்ட் - மாஸ்கெல் கெலன் , முன்னிலையில் வி ஜி சந்தோசம் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
க்ளைடன் மேயர் அப்பு தாமோதரன், மல்லைத் தமிழ்ச் சங்க தலைவர் மல்லை சி ஏ சத்யா மோரிசியஸ், அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், லண்டன் சிவா பிள்ளை, ஆஸ்திரேலியா எழுத்தாளர் சந்திரிகா சுப்பிரமணி, துபாய் தமிழ்ச் சங்கத் தலைவர் மொய்தீன், கவிஞர் பாட்டழகன், முனைவர் உலகநாயகி மற்றும் 20 நாடுகளின் பேராளர்கள் பங்கேற்றனர்.
Advertisement