sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

ஜெர்மெனியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திப்பு விழா

/

ஜெர்மெனியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திப்பு விழா

ஜெர்மெனியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திப்பு விழா

ஜெர்மெனியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திப்பு விழா


ஜூன் 18, 2025

Google News

ஜூன் 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெர்மெனி மற்றும் தமிழ்நாடு இடையிலான வணிக வாய்ப்புகளை ஊக்குவிக்கவும், ஜெர்மெனியில் வசிக்கும் தமிழர்களை தொழில் வளர்ச்சிப் பாதையிலே திருப்பவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டவும், 'வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திப்பு' என்ற நிகழ்ச்சி மிகச் சிறப்பாக பிராங்க்ஃபர்ட்-நகரில் அன்று நடைபெற்றது.


தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பிராங்க்ஃபர்ட் நகரத்திற்கான இந்திய துணை தூதரக அதிகாரி முபாரக் முன்னிலையில் பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கமும் இந்தியத் தூதரகமும் இணைந்து நடத்திய இந்த விழா, ஜெர்மெனியில் வாழும் பலதரப்பட்ட தமிழ் மக்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தது.


அமைச்சருடன் இந்திய துணை தூதரக அதிகாரி முபாரக், ஸ்டார்ட்-அப் தமிழ் நாடு நிறுவனத் தலைவர் சிவராஜா ராமநாதன் மற்றும் பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி ஹரிதாஸ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா ஆரம்பமானது. தமிழ் சங்க துணைத் தலைவர் பழனி வெற்றிவேலன் அனைவரையும் வாழ்த்தி வரவேற்புரை வழங்கினார்.


பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி பேசும்போது, 'இதுவரையிலும் 40 கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கம் நடத்தி இருப்பதாகவும், 120 தன்னார்வ நடன இயக்குனர்கள் மூலம் 2000 பேருக்கு நம்முடைய நாட்டுப்புறக் கலைகளை கொண்டு சேர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் 1200 பயிற்சி வகுப்புகள் இதுவரை நடந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பகல் நேரம் குறைவாக இருக்கும் குளிர்காலத்தில் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க இந்த கலை நிகழ்ச்சிகள் பெரிதும் உதவியாக இருப்பதையும் குறிப்பிட்டார்.


பிராங்க்ஃபர்ட்-ல் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் நம்மவர்களுக்கும் கொரோனா போன்ற சமயங்களில் உதவி செய்திருப்பதை மேற்கோள் காட்டியவர், இதுவரையிலும் 15000 யூரோ பணத்தை தமிழ்நாட்டின் கிராமப்புற மருத்துவமனைகளின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு உதவி இருப்பதாக கூறினார்.


மேலும் அவர் பேசும் போது, 'ஜெர்மெனியில் வாழும் தமிழர்கள் பயன்பெறும் பொருட்டு நூலகத்தில் வைக்க நூல்களுக்கு ஏற்பாடு செய்ய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக மேடையிலேயே தன்னிடம் இருக்கும் நிறைய புத்தகங்களையும் அதிகப்படியாக புதிதாக வாங்கியும் உடனே அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்தார் அமைச்சர்.


அடுத்ததாக தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி அமைச்சருக்கு பொன்னாடை போர்த்த, அதனைத் தொடர்ந்து கண்ணன், இந்திய துணை தூதரக அதிகாரி முபாரக்கிற்கும், சௌந்தர், ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு தலைவர் சிவராஜாவுக்கும் பொன்னாடை போர்த்தினர்.


எப்போதும் பதில் மரியாதை செய்வது தானே தமிழர் மரபு. அந்த வகையில் அமைச்சரும் துணை தூதரக அதிகாரி முபாரக்கிற்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். அதுபோல தமிழ் சங்க தலைவர் பாலாஜிக்கும் பொன்னாடை அணிவித்தார்.


மிக குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கத்துக்கு வாழ்த்து கூறி தன் பேச்சை தொடங்கிய இந்திய துணைத் தூதரக அதிகாரி முபாரக், 'நம்முடைய பாரம்பரிய கலை கலாச்சாரத்தை மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் நம் மக்களுக்கு தமிழ் சங்கம் உதவி செய்து வருவதை பாராட்டினார்.


ஜெர்மெனியில் உள்ள பல இன்ஸ்டியூட் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களின் தொடர் ஆராய்ச்சி மூலம் நூறு வருட ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் கட்டுரைகளை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் இந்த அறிவுத் திறனை கையாள நிறைய திறமை வாய்ந்த இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த மனிதவளம் இந்தியாவில் நிறையவே இருக்கிறது. அந்த சப்போர்ட்டுக்காக, பார்ட்னர்களுக்காக ஜெர்மெனி காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றவர் மேலும் தொடர்ந்தார்.


'தற்போது ஜெர்மெனியில் 1.2 மில்லியன் காலியிடங்கள் இருக்கின்றன. நிறைய செவிலியர்கள் ஜெர்மெனிக்கு வருகிறார்கள். இது போல இன்னும் நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால் ஜெர்மெனிக்கு வந்து தங்களுடைய பொருளாதாரத்தை தரத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்' என்று குறிப்பிட்டார்.


மேலும், 'ஜெர்மெனியின் பல்கலைக்கழகங்களை தொடர்பு கொண்டு புதிதாக தமிழ்நாட்டில் ஆரம்பிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தகவல்களை வாங்கித் தர முடியும்' என்று மேடையிலேயே அறிவித்தது வந்திருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தார்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.


அடுத்து பேச வந்த ஸ்டார்ட்-அப் தமிழ் நாடு நிறுவனத் தலைவர் சிவராஜா ராமநாதன், 'ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பிப்பது முதல் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் என ஒவ்வொரு கட்டத்திற்கும் தங்களின் நிறுவனம் உதவுவதாக குறிப்பிட்டவர் முதலீட்டார்களை இணைக்கும் பாலமாக இருப்பதாகவும் வணிக வழிகாட்டிகளை இணைத்து அவர்கள் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழி காட்டுவதாகவும்' குறிப்பிட்டார்.


இறுதியாக பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன்,'நம் தமிழ் சொந்தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி என்று ஆரம்பித்து ஜெர்மெனி போன்ற பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் பணிபுரியும் உங்களின் அனுப்பவமும் தொழில்நுட்ப அறிவும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் இருப்பதைப் பகிர்ந்து கொண்டார்.


மேலும் அவர் தொடர்ந்து பேசும் போது, 'புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான சூழலை உருவாக்கி அதை ஊக்குவிக்கும் வகையில் வருகிற அக்டோபர் மாதம் 9, மற்றும் 10-ம் தேதிகளில் கோவையில் மிகப்பெரிய பிரம்மாண்ட உலக புத்தொழில் மாநாடு நிகழ்வு நடைபெறுவதையும்' பகிர்ந்து கொண்டார்.


மேலும் ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு நிறுவனத்துக்கும் ஜெர்மனியில் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க விரும்பும் தமிழர்களுக்கும் இணைப்பு பாலமாக 'தமிழ்நாடு டெஸ்க்' என்ற ஒன்றை ஜெர்மெனியில் ஆரம்பிக்க உதவுவதாகவும் உறுதியளித்தார்.


முன்னதாக யோகா மாஸ்டர் ப்ரஷ்ணவ் ஜீவானந்தம் வழிகாட்டலில் மூன்று வயது குழந்தை முதல் 30 வயது இளைஞர் வரை ஆண் பெண் என 25 பேருக்கும் அதிகமானோர் யோகா செய்து யோகா தினத்தை வரவேற்றனர். யோகா தினத்திற்காக அதன் லோகோவுடன் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்து அனைவரும் யோகா செய்தது கூடுதல் சிறப்பு.


இந்தியாவிலிருந்து வந்திருந்த ஸ்டார்ட்-அப் நிறுவன தலைவர்கள், தங்களுடைய ஸ்டார்ட்-அப் பற்றி விளக்கியது அருமை.


ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிறுவனத்தோடு ஜெர்மெனியில் இயங்கும் 'கீபா' என்ற அமைப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு 'ஃப்ரண்ஸ் ஆப் எம்.எஸ்.எம்.இ' என்ற விருதினையும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிறுவனத்திற்கு 'ஸ்டார்ட்-அப் சாம்பியன்' பட்டத்தையும் அந்த அமைப்பினர் வழங்கினார்.


இறுதியாக ஸ்போர்ட்ஸ் செக்ரட்டரி நிர்மல் பாஸ்கர் நன்றியுரை சொல்ல விழா நிறைவடைந்தது.



- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ் (ஜேசுஜி)


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us