/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
பாரிஸ் நகரில் ஸ்ரீ ராமானுஜர் திரு அவதார 1008 ஆம் விழா
/
பாரிஸ் நகரில் ஸ்ரீ ராமானுஜர் திரு அவதார 1008 ஆம் விழா
பாரிஸ் நகரில் ஸ்ரீ ராமானுஜர் திரு அவதார 1008 ஆம் விழா
பாரிஸ் நகரில் ஸ்ரீ ராமானுஜர் திரு அவதார 1008 ஆம் விழா
மே 26, 2025

பாரிஸில் சனாதன தர்ம பக்த சபை கிரிஞீ கோவிலில் ஸ்ரீ ராமானுஜர் திரு அவதார 1008 ஆம் விழா நடைபெற்றது. சனாதன தர்ம பக்த சபை பஜனை குழுவினரின் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமானுஜர் காட்டிய பக்தி மார்க்கம் என்ற தலைப்பில் குடந்தை
உ.வே. டாக்டர் வெங்கடேஷின் ஆன்மிகச் சொற்பொழிவு மிக அற்புதமாக பக்தர்களுக்கு தெளிவாக புரியும்படி சிறப்பான முறையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அனைவரும் சுவாமியின் பிரசாதம் பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சனாதான தர்ம பக்த சபை குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- நமது செய்தியாளர் ஹரே ராம் தியாகராஜன்
Advertisement