/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
“அமெரிக்க விசா குறித்து மாணவர்களின் அச்சம் தேவையற்றது”
/
“அமெரிக்க விசா குறித்து மாணவர்களின் அச்சம் தேவையற்றது”
“அமெரிக்க விசா குறித்து மாணவர்களின் அச்சம் தேவையற்றது”
“அமெரிக்க விசா குறித்து மாணவர்களின் அச்சம் தேவையற்றது”
ஜூலை 02, 2025

யாராலும் தட்டிப் பறிக்க முடியாத ஒரே பொக்கிஷம் கல்விதான். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறோமோ படிக்க முடிகிறதோ அவ்வளவிற்கு மேன்மையடைகிறோம்.
கற்றார்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு - இந்திய கல்வியாளர்களுக்கு அமெரிக்காவில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையுமே ஒரு எடுத்துக்காட்டு!
“அதிபராக ட்ரம்ப் வந்ததும் இந்தியர்களின் விசா - குறிப்பாய் மாணவர்களின் விசாவை குறைத்துவிடுவார் - அதன்பின் அமெரிக்க யுனிவர்சிடியில் நம் மாணவர்களின் பங்கு குறைந்துவிடும்” என்றெல்லாம் பரப்பப்படும் செய்திகள் தவறானவை.
போலி கல்லூரிகளிலிருந்து போலி படிப்பு சான்றிதழ்களுடன் உள்ளே வருபவர்களை தடை பண்ணப் போவதாக தான் அவர் அறிவித்திருக்கிறார். முறையான -தகுதியான கல்விக் கூடங்களிலிருந்து வருபவர்களை அவர் வரவேற்கவே செய்கிறார். அதனால் இந்திய மாணவர்கள் அஞ்சத் தேவையில்லை” என்று 'ADMISSIONs GURUS' கோச்சிங் கல்லூரி நடத்தும் இளங்கோ ராஜகோபால் தெளிவுபடுத்துகிறார்.
கோவையைச் சேர்ந்தவர்
இளங்கோ கோவையைப் பூர்வீகமாய்க் கொண்ட சென்னைவாசி. தமிழை நேசிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர் இவர். அப்பா Dr.CA.ராஜகோபால் பத்துப் உடன்பிறப்புகளுடன் பிறந்தவர். இளம்வயதில் அவரது தந்தை இறந்துவிட, கஷ்ட ஜீவனத்தில் அம்மா - படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிள்ளைகளை படிக்க வைத்திருந்தார். அந்த காலகட்டத்திலும் ராஜகோபாலும் பிறர் உதவியுடன் மருத்துவம் படித்து ஜெயித்ததை பெரும் சாதனை என்கலாம்.
பொருளாதாரம்-வசதிகள் இல்லாவிட்டாலும் கூட அனைவருக்கும் கல்வி முக்கியம் என்பது சின்ன வயதிலிருந்தே இளங்கோவின் மனதில் ஊறிப் போயிருந்தது. இளங்கோ சென்னையில் பள்ளி படிப்புக்குப் பின் கோவை PSG-யில் B.E.எலெக்ட்ரிகல் முடித்தார். அவரது வீட்டுக்கு அக்கம் பக்க அன்பர்கள் அமெரிக்கா செல்வதும் படிப்பு முடித்து வரும்போது அவர்களுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் இளங்கோவை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது.
அதன் காரணமாய் அமெரிக்கா என்பது அவரது ரத்தத்தில் ஊறி, ஊனும் உணர்வுமாயிருந்தது. இளங்கோவின் தந்தை மெட்ராஸ்மெடிக்கல் கல்லூரியில் (சிவில் சர்விஸ்) புரபசராக இருந்தவர். இளங்கோவும் டெக்சாஸ் - மாநில ஆஸ்டினில் M.S.-MASTER IN PUBLIC POLICY படித்து ( நம்மூர் IAS போல) அங்கு ஸ்டேட் ஜட்ஜ் பதவி வகித்தார்.
இளங்கோவின் சிந்தை செயல் எல்லாம் கல்வி பற்றியே இருக்கும். நம் நாட்டில் கல்வி - வேலைவாய்ப்பு பற்றிஎல்லாம் நிறைய பேசப் படுகிறது. வழிகாட்ட பலரும் உள்ளனர். மாணவர்களும் அவற்றை ஆர்வமுடன் விசாரித்து அறிகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை. பசங்களின் படிப்பு என்பது அவர்களது பர்சனல் விருப்பப்படி இருக்க வேண்டும் என்கிற நிலைமை. தத்தம் விருப்படி தாமே படிப்புக்களைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். அதனால் யாரும் யாருடனும் கலந்து பேசுவதில்லை.
வழிகாட்டுதல் அமைப்பு
ஆனால் இந்திய மாணவர்களுக்கு இந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அதற்குவேண்டி 'ADMISSION GURUS' எனும் கோச்சிங் காலேஜ் ஆரம்பித்து இளங்கோ சிறப்பான சேவை செய்து வருகிறார். பிள்ளைகள், சமயத்தில் பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதில்லை, மதிப்பதில்லை. ஆனால், அனுபவம் மற்றும் கல்வி அறிவின் காரணமாய் இவர் சொல்லும்போது கவனிக்கிறார்கள். விபரங்கள் கேட்டுத் தெரிந்து மேற்படிப்பு மற்றும் வேலைகளுக்கு நல்ல வழிகாட்டுதல் பெறுகிறார்கள்.
இதன் மூலம் மாணவர்களின் அறிவும் ஆற்றலும் நெறிபடுத்தப்படுகிறது. அவர்களது எதிர்காலம் வளமாக்கப்படுகிறது. இந்த மாதிரி இவரது கோச்சிங் மூலம் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கில் பலன் பெற்றுள்ளனர். அமெரிக்கா என்றில்லை. அமெரிக்காவில் பணிபுரியும் பெற்றோர்களின் இந்தியாவில் படிக்கும் மாணவர்கள், அதேப போல் இந்தியாவில் பெற்றோர்கள் இருக்க அமெரிக்காவிற்கு படிக்க வருபவர்கள் என அனைவருக்குமே இது உபயோகமாக உள்ளது.
இளங்கோவின் கல்வி தாகம் தீர்வதில்லை.தொடர்கிறது. அவர் பென்சில்வேணியாவின் WAHARTON பிசினஸ் ஸ்கூலில் MBA வும் முடித்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உள்ளூர் மாணவர்களைவிட நம் மாணவர்களுக்கு திறமையும் ஆற்றலும் அதிகம். உள்ளூர் மாணவர்கள் நம் மாணவர்களுடன் போட்டியிட முடிவதில்லை என்பது நிஜம். அவர்களின் கலாச்சாரம், தனிமையான வாழ்க்கையுடன் சுயமாய் முடிவெடுத்து பயணப்படவே விரும்புகிறார்கள்.
இளங்கோ மேல்படிப்பு மட்டுமின்றி பசங்களை அவர்களின் ரசனைப்படி தொழில் கற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்கிறார்.
இளங்கோவின் மனைவி ஆஷா ஆந்திராவை சேர்ந்தவர். IT கரக்பூரில் MSC(MATHS) படித்து மென்பொருள் நிர்வாகியாக பணிபுரிந்தவர். பிறகு கணவரின் கோச்சிங்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு இருவருமாக இணைந்து மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். இவர்களது மகள் ப்ரீதி கன்சல்டன்டாக பணிபுரிகிறார். மகன் வினய் BBA படிக்கிறார்.
50 சதமாகும்
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய 25%இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். இன்னும் 15 வருடங்களில் அது 50% ஆகி இந்திய ஜனத்தொகையும் இங்கு கணிசமாய் கூடும் என பெருமைப்படுகிறார் இளங்கோ. இந்திய படிப்பும், டெக்னாலஜியும் நிச்சயம் சிறப்பானவை. முன்பெல்லாம் அமெரிக்காவில் இந்தியர்கள் கலாச்சாரம் மறந்து வாழ்வதாக பேசப்படும். இப்போது அப்படியில்லை. இந்தியாவில் இருக்கும் இளைய சமுதாயத்தை விட அமெரிக்காவில் உள்ள இளைய சமுதாயம், கலை, கலாச்சாரம், நாட்டுப்பற்று, பூஜை, பக்தி, சங்கீதம், நாட்டியம், என எல்லாம் கற்று வருகிறார்கள்.
நம்மூரில் அரசியல், சினிமா டி.வி. என மாணவர்களின் கவனம் சிதறுகிறது. விஞ்ஞான வளர்ச்சியில் நெட் மிகப்பெரிய பயனுள்ள விஷயம். அதில் தேடினால் அனைத்து விஷயங்களும் உடனே கிடைக்கும். ஆனால், ஆன்லைன் மூலம் பெரும்பாலும் பொழுதுபோக்கு, விளையாட்டு என திசை திருப்பபடுகிறது. அதன் காரணமாக கூட இவர்களின் வழிகாட்டுதல் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இவர்கள் வழிகாட்டி மட்டுமில்லை- ஒளிகாட்டியும் கூட!
- ஆஸ்டினிலிருந்து R தினேஷ்குமார்