sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்வோமா? அமெரிக்கா அழைக்கிறது! - 3

/

அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்வோமா? அமெரிக்கா அழைக்கிறது! - 3

அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்வோமா? அமெரிக்கா அழைக்கிறது! - 3

அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்வோமா? அமெரிக்கா அழைக்கிறது! - 3


டிச 20, 2024

டிச 20, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் இல்லாத இயற்கை எழில் அமெரிக்காவில் அப்படி என்ன இருக்கிறது என்று பலர் கேட்கலாம்.

உலகிலேயே மிக உயரமான மலைத் தொடர் இமயமலை. அதன் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்து, புத்த, சீனருக்குப் புனிதமான கைலாச மலையும் இருக்கிறது. எத்தனை நாள் வைத்துக்கொண்டாலும் கெட்டுப் போகாத புனித நீர்ப் பிரவாகம் உள்ள கங்கை இந்தியாவில்தான் ஓடுகிறது. பனி படர்ந்த மலையிலிருந்து, வெப்ப மண்டலக் காடுகளும், மாரிக்கால மழைப் பொழிவும், பாலைவனங்களும், சதுப்பு நிலங்களும், உலகிலேயே அதிகமான ஜனத்தொகையும், அவர்களின் விதம்விதமான பண்பாடுகளும், அதற்கேற்ற கட்டிடக் கலைகளும், நகரங்களும், கிராமங்களும், உள்ளன.


நன்கு வளர்ந்து பேசப்படும் 22 மொழிகள் உள்ளன. அவர்கள் அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்துடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இணைந்துள்ளனர் என்ற பெருமையும்கூட. எல்லா இடங்களுக்கும் பயணிக்க ரயில், சாலை, விமான வசதிகளும் உள்ளன.

பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்


அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், உலகத்திலே மிகப்பெரும் பள்ளத்தாக்கான கிராண்ட் கான்யன் அமெரிக்காவில் உள்ளது. அது எட்டு மைல் (12.8 கி.மீ) அகலமும், ஒரு மைல் (1.6 கி.மீ) ஆழமும் உள்ளது. அந்தப் பள்ளத்தாக்கின் அடியில் கொலராடோ என்னும் நதி ஓடுகிறது. அது ஓடும் இடத்தில் தெரியும் பாறை உலகில் நம் கண்ணுக்குத் தெரியும் மிகப் பழமையான கருநிறப் பாறை. அதன் பெயர் விஷ்ணு சிஸ்ட் (Vishnu schist). அந்தப் பள்ளத்தாக்கில் உள்ள மலைகளுக்கு சிவா கோவில், விஷ்ணு கோவில், பிரம்மா கோவில், தேவா கோவில் என்று பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மிக ஆழமான டாஹோ ஏரி இருக்கிறது. வருடம் 365 நாளும், 60லிருந்து 110 நிமிடங்களுக்கு ஒருமுறை 180 அடி (54 மீட்டர்) உயரம் நீராவி உமிழும் ஓல்ட் ஃபெய்த்ஃபுல் என்னும் நீராவி ஊற்று இருக்கிறது. உயர்ந்த கட்டிடங்கள் உள்ள நியூ யார்க், ஷிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், சான் ஃபிரான்சிஸ்கோ என்னும் நகரங்கள் உள்ளன. டிஸ்னி லான்ட் இருக்கிறது. கடல் மட்டத்துக்குக் 235 அடி கீழே செயற்கையாக உருவாக்கப்பட்ட சால்ட்டன் ஏரி உள்ளது.
உலகத்தில் மிகவும் உயரமான ஹூவர் அணை உள்ளது. இரவைப் பகலாக்கும், பலவிதமாக தங்கும் ஹோட்டல் வசதி உள்ள, சூதாட்டம் நிகழும் நகரமான லாஸ் வேகாஸ் உள்ளது. 4100 சதுர கி.மீ பரப்பளவு உள்ள, 130 ஏரிகள் உள்ள, பனி ஆறு ஓடும் கிளேசியர் நேஷனல் பார்க், ஆண்டுக்கு மூன்று மாதம் சூரியன் மறையாத, சூரியன் எழாத அலாஸ்கா மாநிலமும்
அமெரிக்காவின் சிறப்பு. இப்படிப்பட்ட நாட்டைப் பார்க்க எவருக்கும் ஆவல் இருக்குமல்லவா? லட்சக் கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள், உடன்பிறப்புகள் அவர்களைச் சென்று பார்க்க ஆசை இருக்கத்தானே செய்யும்? .பேரன், பேத்தி பிறக்கப்போகிறது என்றால், தன் மகளுக்குக் கூட இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை தாய்மார்களுக்கு இருக்காதா?
இப்பொழுது வணிகம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள எந்தவொரு தொழிலதிபரோ, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிபவரோ வணிக நோக்கத்திற்காகவோ, அல்லது கல்வி, அறிவியல், தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவோ அமெரிக்கா செல்ல விரும்பலாம் அல்லவா?
இதையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள அமெரிக்க செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் எங்கு செல்ல வேண்டுமென்றாலும், ரயிலோ, பஸ்ஸோ, காரோ, விமானமோ - நினைத்துக்கொண்டால் கிளம்பி விடலாம். யாரும் தடுக்கமுடியாது. ஆனால், அப்படி அமெரிக்காவுக்குச் செல்ல முடியுமா? அதற்கு என்ன வழி? அமெரிக்காவின் விருந்தாளியாகச் செல்லலாம்.

விருந்தினர் (விசிட்டர்) விசா:


இந்த விசா இருவகைப் பட்டது - தொழில் விசா, சுற்றுலா விசா. தொழில் விசா வை பி-1 (B-1) என்றும், சுற்றுலா விசாவை பி-2 என்றும் சொல்வர். நாம் எதற்காக அமெரிக்கா செல்கிறோம் என்பதைப் பொறுத்து இந்த விசாக்களுக்கு மனுச் செய்யலாம்.

பி-2 விசாவில் செல்பவர்கள், உறவுகளையும், நண்பர்களைப் பார்க்கவும், மருத்துவ சிகிச்சை பெறவும், அமெச்சூர் கலைஞர்கள் இசை, விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளிலோ, போட்டிகளிலோ கலந்துகொள்ள அங்கு செல்லலாம். ஆனால் அதற்காக எந்த ஊதியம் பெறக்கூடாது. ஆனால், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவோ, வேலை பார்க்கவோ, ரசிகர்கள் காசு கொடுத்துப் பார்க்கும் நிகழ்ச்சியில் ஊதியம்பெற்றுப் பங்கேற்கவோ கூடாது. எனினும், விடுமுறையில் செல்லும்போது, சில நாள்கள் நடத்தப்படும் கல்விப் பயிற்சியிலோ, கலைப் பயிற்சியில் கலந்து கொள்ளத் தடையில்லை.


அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை - அது குடிமக்களின் சிசுவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் -கள்ளத்தனமாக வந்தவரின் மகவாக இருப்பினும், அது அமெரிக்கப் பிரஜை என்று அமெரிக்க அரசியல் அமைப்பு கூறுகிறது. அதனால் எப்படியாவது அமெரிக்கா வந்து குழந்தை பெற்றுக் கொண்டால், அந்தக் குழந்தையாவது அமெரிக்கக் குடியுரிமை பெறுமே என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆகவே, கர்ப்பிணிகள் அமெரிக்கா வந்து குழந்தை பெற்றுக்கொண்டு, அக்குழந்தைக்கு அமெரிக்கப் பிரஜா உரிமை பெறமுயற்சிப்பதும் இந்த விசாவில் அனுமதிக்கப்படமாட்டாது.
இந்தியா உள்பட பல நாடுகள் பெற்றோர் ஒருவராவது அந்த நாட்டுப் பிரஜையாக இருந்தால்தான் குடியுரிமை வழங்குகின்றன. ஆகவே, மற்றநாடுகளில் இல்லாத இந்தப் பிறப்புக் குடியுரிமையை நீக்கவேண்டும் என்று அரசியல்வாதிகள் முயலுகிறார்.கள். அது வேறு விஷய்ம்.

விசா வாங்கும் முறை:


விசாவுக்கு அமெரிக்கத் தூதர் அலுவலகத்திற்கு மனுச் செய்ய வேண்டும். இது தூதர் அலுவலகத்தைப் பொறுத்து மாறுபடலாம். கீழ்க்கண்ட சுட்டியில் அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

https://in.usembassy.gov/visas/


சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பாய், புதுடில்லி தூதரங்களுக்கு இணையமூலம் விசாவுக்கு மனுச்செய்யக் கட்டணம் எதுவும் இல்லை. வேண்டுமென்றால் ரூ.850 கட்டணம் செலுத்தி, அதற்கான மனுவையும், மற்ற ஆவணங்களையும் தூதரகங்களில் இருக்கும் பெட்டியில் போட்டுவிடலாம். விசா ஒரு ஆண்டிலிருந்து பத்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

விசா கிடைத்ததும் அமெரிக்காவுக்குச் செல்லலாம். பலமுறை நுழைவு விசா என்பதால், கொடுத்திருக்கும் காலம் பலமுறை அமெரிக்கா வரலாம் என்றுதான் அர்த்தமே தவிர, எத்தனை ஆண்டுகள் கொடுத்திருக்கிறார்களோ, அத்தனை ஆண்டுகள் அங்கு தங்கமுடியாது.


அமெரிக்காவில் நுழையும்போது எதற்காக வந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து குடியேற்ற அதிகாரி அத்தனை காலம் அமெரிக்காவில் இருக்க அனுமதி கொடுத்து நமது பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தித் தருவார். அதுவரை நாம் அமெரிக்காவில் இருக்கலாம்.

விசா வாங்கினாலும் சட்ட விரோதமா?


அதற்குமேல் அனுமதியின்றித் தங்கினால் சட்டவிரோதம். அதிகாரிகள் அப்படித் தங்குபவரை வலுக்கட்டாயமாக அவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்ப முடியும். அதுபோலவே, கலை நிகழ்வுக்கு வந்து ஊதியம் வாங்கினாலோ, சட்டவிரோதமாக வேலை செய்தாலோ, வெளியேற்றப்படுவர். அப்படிச் செய்தால், அடுத்தமுறை உள்ளே நுழையவிட மாட்டார்கள்.

இவ்வளவு கெடுபிடி இருப்பினும் சட்ட விரோத குடியேற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது குறித்து நாளை பார்ப்போம். ( தொடரும்)


- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்






      Dinamalar
      Follow us