/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
ஏ......(ர்)...டாக்ஸி...டாக்ஸி...!
/
ஏ......(ர்)...டாக்ஸி...டாக்ஸி...!

பெங்களூர் நகரத்திலிருந்து ஏர்போர்ட் செல்லணும் என்றால் குறைந்தது ஒன்றரை மணி நேரம் - டாக்ஸிக்கு ரூ.2500 ஆகிறதாம். அதற்காக ஏர் டாக்ஸியை இயக்கப் போவதாய் செய்தி! இதற்கு ரூ.1700 தானாம். பத்து நிமிட பயணம்! ஆனால் ஒரு முறை ஆறு பேர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
நம்மூரில் வசதியானவர்கள் சார்ட்டட் விமானத்தில் பயணிப்பதுண்டு. இப்படி ஒரு ஏர் டாக்ஸியில் ( கேரவன் ) பயணிக்கும் அனுபவம் அமெரிக்காவில் எங்களுக்கு கிடைத்தது. மகன் சரவணன் இருக்கும் பிட்ஸ்பர்க்கிலிருந்து - மகள் அபர்ணா வீடு வாஷிங்டனுக்கு தரை மார்க்கம் என்றால் 4 மணி நேரம்! “உங்களுக்கு ஒரு புது அனுபவமாய் இருக்கட்டும்!” என்று மாப்ஸ் விஜய் - “நீங்க மயில்வாகனத்தில் பறக்க ஏற்பாடு செய்துள்ளோம்!” என்று கேரவனை புக் பண்ணியிருந்தார்.
மயிலோ - மானோ பாதுகாப்பாய் பறந்தால் சரிஎன்று ஒருவித கற்பனையுடன் ஏர்போர்ட் வழக்கமான செக்இன் -செக்யூரிட்டி செக் - தாண்டி கடைசியோ கடைசியில் ஒதுக்காய் எங்கள் கேட்! விமானத்தில்12 சீட்கள் லட்சியம்! 9 பேர் நிச்சயம்! வண்டி குட்டி என்றாலும் ஸ்ட்ராங்! டர்போபிராப் ஒற்றை என்ஜின்.! 30 வருடம் முன்பு உருவான செய்னாவின் தயாரிப்பு. 946 கடல் மைல் வேகம் ! 675 ஹார்ஸ் பவர்.!
கண்ணாடிக்கு அந்தப் பக்கம் மைதானத்தில் - தட்டாம்பூச்சி போல ஏதோ ஒன்று! அதுதான் கேரவனாம்! அதைப் பார்க்க இளப்பம். இதுவா! ஆமாம். இதுதான் என்று சொல்லி பட்டாம் பூச்சிகள் எங்களை அன்பொழுக ஏற்றி விட்டன. அட ..பறக்கும் ஷேர் ஆட்டோ!
உள்ளே வழக்கமான விமான—சீட்! ,பெல்ட்! பாதுகாப்பு கிளாஸ் ! இதற்கும் இரண்டு விமானிகள்.! (விமானம் ஓட்டுவது மட்டுமின்றி- பயணிகளுக்கு படம் எடுத்து தருவதும் அவர்களின் பொறுப்பு போல!) வண்டி டக...டகவென நகர்ந்து- ஊர்ந்து---ஓடி --தாவி மேகத்தைப் பற்றி கொண்ட போது கூட ஒழுங்கா ஊர் போய் சேரும் என்கிற நம்பிக்கை ஏற்படவில்லை !
அந்த மயில் அதிக உயரத்திற்கு ஆசைப் படவில்லை. நதி,,கடல் ,கட்டிடங்கள், நகர மிணுப்புகளை பார்த்து ரசிக்கிற உயரத்துக்கே வண்டி பறந்து - ஷேமமாய் இறக்கி விட்டது. நிஜமாலுமே புது அனுபவம்!
சாதாரண விமானத்தை விட மூன்று பங்கு கம்மி விலையில் இவர்களுக்கு எப்படி இது கட்டுப்படியாகிறது என்று தெரியவில்லை!
- என்.சி.மோகன்தாஸ்