sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

வெள்ளிவிழா கொண்டாடும் உலகத் தமிழ்க் கல்வி கழகம்

/

வெள்ளிவிழா கொண்டாடும் உலகத் தமிழ்க் கல்வி கழகம்

வெள்ளிவிழா கொண்டாடும் உலகத் தமிழ்க் கல்வி கழகம்

வெள்ளிவிழா கொண்டாடும் உலகத் தமிழ்க் கல்வி கழகம்


டிச 18, 2024

டிச 18, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருகில் இருக்கும், எளிதாய் கிடைக்கும் எதன் அருமையும் நமக்குத் தெரிவதில்லை. மொழியும் அப்படிதான். கண்ணுக்கெட்டா தூரத்தில், தாய்மொழியே கேட்க இயலாத தொலைவில் வசிக்கும் போதுதான் அதன் அருமை நமக்கு புரியும்.

அமெரிக்க தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தமிழுக்காக ஆளாய் பறக்கிறார்கள். வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள். அதுவும் குறிப்பாய் பெற்றோர்கள் ! தங்கள் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும். தங்கள் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர்.


ஒரு இடத்திற்கு வேலைக்கு நிமித்தமாய் செல்லுகையில் பொதுவாய் அருகில் பள்ளி இருக்கிறதாவென்று தான் எல்லோருமே பார்ப்போம். அத்துடன் பிள்ளைகளுக்கு தமிழ் கற்கவும் வாய்ப்பு இருக்கிறதா என்றுதான் இங்கு தேடுகின்றனர்.

தோன்றக் காரணம்


நம் பிள்ளைகள் தமிழை மறந்து விடக் கூடாது என்கிற வேட்கை! அதற்கு நாங்கள் இருக்கிறோம் என்று தோற்றுவிக்கப்பட்டது தான் உலகத் தமிழ்க் கல்விக்கழகம்( International Tamil Academy).

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் துவங்கப்பட்ட இதன் வயது 26 ! அதை துவங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம். இவர் முன்னாள் தமிழக அமைச்சர் மாதவனின் புதல்வி!


வெற்றிச்செல்வி இளம் வயதிலிருந்தே தமிழ் ஊட்டப்பட்டவர்.சிங்கம்புனரி எனும் ஊரில் பிறந்தவர்.அப்பா அரசியலில் என்றாலும் கூட விவசாயம்தான் முதன்மை. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்.

வெற்றிச் செல்வியான சிறைச் செல்வி


மாதவன் விலைவாசி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் சிறை சென்று விடுதலையான அன்று இவர் பிறந்ததால் முதலில் சிறைச்செல்வி என பெயரிடப்பட்டு பிறகு வெற்றிச்செல்வியாக அது மருவிற்று.


இவரது மூதாதையர்கள் மலேசியாவில் வியாபாரம் செய்து வந்தனர். 1967இல் மாதவன் மந்திரியாகி விட இவர்கள் குடும்பம் சென்னைக்கு மாற்றம் அடைந்தது ! அங்கு செல்வியை வளர்த்தது செயின் ஆண்டனி பள்ளிதான் என்றும் சொல்லலாம். அழைத்துப் போக ஆள் இல்லாமல் பள்ளியிலேயே பல மணிநேரங்கள் இருப்பார். அப்பா பிஸி என்பதால் கொண்டு போய் விட அழைத்து வர வாகனம் இல்லாமல் எப்போதும் ரிக்ஷாதான்!

செல்வி பி.ஏ முடித்ததும் திருமணமாகி உடனே சிங்கப்பூர் ! பிறகு எம்.ஏ முடித்தார். கணவர் ராஜமாணிக்கம் IIT( கரக்பூரில்) படித்தவர்.முதலில் சிங்கப்பூர் Texas Instruments ல் வேலை பார்த்து பிறகு 1988 ல் அமெரிக்காவில் குடியேற்றம்! இடையில் மலேசியா சென்று மறுபடியும் 1994 இல் அவர்கள் கலிபோர்னியாவில் பணி நிமித்தமாய் மீண்டும் அமெரிக்கா சென்றனர்.


ராஜமாணிக்கமும் சமூக அக்கறை கொண்டவர். ஸ்காலர்ஷிப்பில் படித்த விசுவாசம் அவருக்கு எப்போதும் உண்டு. இந்த சமூகத்திற்கு எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுபவர். தற்போது iVP என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

அப்பாவுடன் வெளியே கூட்டங்களுக்கும், சந்திப்புகளுக்கும் சென்றிருப்பதால் இளம்வயதிலிருந்தே செல்விக்கு தமிழ் மேல் பற்று அதிகம்.


தமிழுக்காக ஏக்கம்
அமெரிக்கா சென்றதும் அங்கு தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத் தர என்ன வழி என்று தேடினார். யாராவது சொல்லித் தர மாட்டார்களா என்கிற ஏக்கம் ! அப்போது அப்பா “தமிழை ஏன் வெளியே தேடுகிறாய். நீயே தமிழ் கற்றுக் கொடேன்” எனத் தூண்டினார்.

அதை ஏற்று வீட்டில் 4 மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்க ஆரம்பித்தார். அது ஆறே மாதத்தில் 50 ஆயிற்று. அப்படி வளர்ந்து வளர்ந்து உலகத் தமிழ்க் கல்விக்கழகமாக இன்று உலகம் முழுக்க வியாபித்துள்ளது.


18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்
இன்று அமெரிக்காவில் பல மாநிலங்களில் நூற்றிற்கும் மேற்பட்ட சார்பு பள்ளிகள், பல நாடுகளில் என விரிந்து 18,300 மேற்பட்ட மாணவர்களுடன் 25 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

கலிபோர்னியாவில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சம்பளத்திற்காக பணி புரிபவர்களல்ல. தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத் தர வேண்டும் என அறிமுகமாகி அப்படியே தமிழ் சேவையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளவர்கள். பின் உலகத் தமிழ்க் கல்விக் கழகம் மூலம் தங்களுக்கு தேவையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்.


வயதிற்கேற்ற பாடத்திட்டம்
மூன்று வயதிலிருந்து மழலையர் வகுப்பு, ஆரம்பப்பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி என ஒவ்வொரு வயதிற்கும் தகுந்த மாதிரி இங்கு பாடத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி பாட திட்டத்தில் ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி அவசியம் படித்தாக வேண்டும். சைனீஸ், ஹிந்தி எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்க உலகத் தமிழ்க் கல்வி கழக முயற்சியால் தமிழுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.


இதற்காக கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஐந்து மணி நேரம் சொல்லித்தரப் படுகிறது.

ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி


ஆசிரியராக வருபவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்கிறார்கள். பாடத்திட்டங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. மின் புத்தகங்களும் (E books) தயாரிக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்க கையேடுகள் கொடுக்கப்படுவதால் அவர்கள் முறையாய் கற்றுத் தர ஏதுவாக இருக்கிறது.


தமிழகத்திலிருந்தும், தமிழ் இணைய கல்விக்கழகம் (TVA) இவர்களுக்கு அவ்வப்போது உதவி வருகின்றது. தற்போது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு தமிழ் இணைய கல்விக்கழகம் புத்தகங்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

செல்விக்கு அவரது கணவர் பல வழிகளிலும் உதவியாக இருந்து வருகிறார். இவர்களது வாரிசுகள் பொன்னியும், விக்ரமும் கூட உதவியாக இருக்கிறார்கள்.


செல்விக்கு அப்பா மாதவன் மட்டுமின்றி அம்மா தனலட்சுமி, நியூ ஜெர்சியில் மருத்துவராக இருக்கும் சகோதரி சாந்தி , ஊரில் பிசினஸ் செய்யும் சகோதரன் அருள் என வீட்டில் அனைவருமே இவருக்கு ஊக்கம் தந்து வருகிறார்கள்.

குடும்பத்தினரைப் போலவே வெளியே இன்னும் பலரும் இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது சேவை ஆற்றி வருகிறார்கள். நேர்மை, நாணயம் என ஆத்மார்தத்துடன், இருப்பதால் அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த 25 வருட சாதனை நிகழ்ந்திருக்கிறது.


தன்னார்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் , ஆசிரியர்களுடன் நிர்வாக குழுவில் இருக்கும் மேலும் ஒன்பது பேர்களின் பங்களிப்பு குறித்து வெற்றிச்செல்வி நெகிழ்கிறார். அவர்களின் சிலரை இங்கே அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறார்.

ஸ்ரீவித்யா வேல்சாமி: தூத்துக்குடியைச் சேர்ந்தவர். BBA படித்தவர். தமிழ் ஆர்வத்தால் இதில் 24 வருடங்களாக சேவை செய்பவர்! இப்பள்ளியின் கிளை ஒன்றிற்கு தலைமை ஆசிரியராக இருந்திருக்கின்றார். தற்போது ITA வின் பொருளாளர். ITA நடத்தும் மாநாடுகளின் ஒருங்கிணைப்பாளர் அது மட்டுமன்றி இப்பள்ளியின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.


கவிதா செந்தில்குமார்: மதுரைக்காரான இவர். BSC பட்டதாரி. இந்த அகடமியில் 15 வருட ஆசிரியர். பள்ளி பாடக் குழுவில் 22 வருட சேவை! பள்ளியின் கிளைகளுக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து கல்வியின் முன்னேற்றத்திற்கு உதவுகிறார். தேர்வு, கேள்வித்தாள் தயாரிப்பு குழுவிலும் இருக்கிறார்.

ஆண்டி நல்லப்பன்: இவர் FREMONT பள்ளியின் முதல் முதல்வர். காரைக்குடியைச் சேர்ந்தவர்.கடந்த 20 ஆண்டுகளாக இப்பள்ளியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படுபவர். இவர் உலகத் தமிழ்க் கல்விக்கழகத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளதத்தை நிர்வகிப்பவர். தொழில் நுட்ப குழுவின் தலைவர்.


நாகலட்சுமி ஆரோப்ரேம்: விருதுநகரைச் சேர்ந்த B.A பட்டதாரியான இவர் 22 வருடங்களாக இந்த அகடமியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படுகிறார். புதிதாய் வரும் ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்பவர்.

நித்யவதி சுந்தரேஷ் : இவர் சென்னைவாசி. MA படித்தவர். பட்டிமன்ற பேச்சாளர். கட்டுரையாளர். கடந்த 18 ஆண்டுகளாக தன்னை ITA வில் இணைத்துக் கொண்டவர். இதில் ஆசிரியராகவும், உயர்நிலைப் பள்ளிக்கு முதல்வர் ஆகவும், தற்போது அகடமி போர்டில் செகரட்டரி,போர்டு மீட்டிங் நடத்துவது, தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் என இவரது பணி தொடர்கிறது.


லோகநாதன் வெங்கடாசலம்: 23 ஆண்டுகளாக பல வழிகளில் இப்பள்ளிக்கு துணை நிற்பவர். முக்கிய ஆவணங்கள், மின்னஞ்சல்களை சரிபார்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர். அனைத்து சார்பு பள்ளிகளையும் நிர்வகிப்பவர். புத்தக கிடங்கை நிர்வகிப்பவர் என அவர் பணி நீண்டுக் கொண்டே செல்கிறது.

சுமதி வெங்கடபதி பத்மநாபன்: இவர் கோவைவாசி. 23 வருடங்களாக இதில் தன்னார்வலராக உள்ளார். மழலை கல்வியிலிருந்து எட்டாவது வகுப்பு வரை படிப்பித்ததுடன், பள்ளி முதல்வராக இருந்ததுடன், பாடத்திட்ட குழுவின் அங்கமாக இருந்து வருகிறார் .


கந்தசாமி பழனிசாமி: 22 ஆண்டுகளாக ஆசிரியராக தொடர்பவர். தமிழ் கற்க ஆர்வம் உள்ள தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் உரையாடல் வகுப்புகளை நடத்துபவர்.

அயல் மண்ணில் தமிழ்க் கற்பிக்கும் சிறந்த பணியைத் செய்து வரும் இப்பள்ளி, இதன் நிறுவனர் வெற்றிச்செல்வி, நிர்வாகக் குழு, ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தன்னார்வலர்களும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.


- என்.சி.மோகன்தாஸ்







      Dinamalar
      Follow us