sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

ரியல் எஸ்டேட் செய்யவும் அமெரிக்காவில் பரீட்சை

/

ரியல் எஸ்டேட் செய்யவும் அமெரிக்காவில் பரீட்சை

ரியல் எஸ்டேட் செய்யவும் அமெரிக்காவில் பரீட்சை

ரியல் எஸ்டேட் செய்யவும் அமெரிக்காவில் பரீட்சை


டிச 17, 2024

டிச 17, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொந்த வீடு என்பது அனைவருக்கும் உலகம் முழுக்க உள்ள கனவு ! அவரவர்கள் வசதி வாய்ப்புக்குத் தக்கபடி இந்தக் கனவின் நீள... அகல...ஆழம் மாறுபடலாம்.

நம்மூரில் இடம் - வீடு என ரியல் எஸ்டேட் செய்பவர்கள் 'சதுரங்க வேட்டையாக' பேசி, மயக்கி, ஊரை அடித்து உலையில் போடுவது நடப்பதுண்டு.கவர்ச்சி வாக்குறுதிகள் ! உருட்டு-புரட்டு! மாட்டுபவர்களின் தலையில் மிளகாய்!



நம் நாட்டில் ரியல் எஸ்டேட் செய்வதற்கு எந்த வித படிப்பும் இருப்பதாக தெரியவில்லை. வாயிருக்கும் எவர் வேண்டுமானாலும் உசுப்பலாம். களத்தில் இறங்கலாம். ஜமாய்க்கலாம். அமெரிக்காவில் அப்படிஎல்லாம் முடியாது. கும்மாங்குத்து !


இந்த சட்டத் திட்டங்கள் பற்றி அங்கு இத்துறையில் இயங்கி வரும் நண்பர்கள் கோபி மற்றும் ஸ்வர்ணா மூலம் சில தகவல்களை பெற முடிந்தது.

இத் தொழிலை அந்தந்த மாநிலத்தவர்கள் அவர்கள் பகுதியில் தான் செய்ய முடியும். கிரீன் கார்டு அல்லது எம்ப்ளாயிமெண்ட் ஆதரைசேஷன் (EAD) இருந்தால் வெளிமாநிலத்தவரும் இறங்கலாம். இதற்கு லைசன்ஸ் வேணும். அதற்கு ஆறு மாத படிப்பு! ரிஜிஸ்தர் செய்து சென்டருக்கு போய் தேர்வு எழுதி 70%க்கு மேல் மார்க் எடுத்தால் தான் லைசென்ஸ்! அதுவும் கூட உடனே தொழிலில் இறங்கி விட முடியாது. அதிகாரப் பூர்வ ரியல் எஸ்டேட் கம்பெனியில் சேர்ந்து அவர்களுக்கு கீழ் பணி புரிந்தால் தான் லைசன்ஸ் ஆக்டிவாகும்.


பொய் - பித்தலாட்டம் கூடாது - கன்னா பின்னா விலை கூடாது. நேர்மையாய் நடக்கணும் - தப்பாடினால் லைசென்ஸ் பறிபோகும்-- போன்ற சட்ட திட்டங்கள் அங்கு உண்டு. (அடிமடியிலேயே கை வைக்கிறாகளே!) இடம் அல்லது வீட்டிற்கு காண்ட்ராக்ட் போட்டு, அதற்கு ஏறக்குறைய 12 டிபார்ட்மெண்டுகளில் அப்ரூவல் வாங்கியாகனும்!. எல்லாம் சரியாய் இருந்தால் ஒரே வாரத்தில் கிடைக்கும். இல்லாவிட்டால் மேயர் அமைத்திருக்கும் கவுன்சிலர் குழுவிற்கு போய் மன்றாட வேண்டி வரும்.

அங்கு லஞ்சம் எனும் கொள்ளை கிடையாது. அப்படி காரியம் சாதிக்க முடியாது. ஆனால் நாகரீகமாக ஏதாவது டிரஸ்ட்டுக்கு சிபாரிசு செய்யச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாமே சிஸ்டப் படி! கறுப்பு பண விளையாட்டும் கிடையாது. நேராய் வா - நேராய் போ!


ரியல் எஸ்டேட் செய்வதற்கு தேசிய -மாநில--சிட்டி அளவில் மெம்பராகணும். அதே மாதிரி வீடு விற்பனைக்கும் லைசன்ஸ் இல்லாமல் களத்தில் இறங்கினால் தண்டனை! அதே போல வீடு கட்டுவதற்கும் சில நடைமுறைகள் உண்டு.வீட்டிற்குள் என்னென்ன வருகிறது-எப்படி-- எத்தனை ப்ளக் பாயிண்ட் என்பது முதற்கொண்டு குறிப்பிட்டாக வேண்டும்.அனைத்தும் பாதுகாப்பு நடைமுறைப்படி அனுமதிக்கப்படும். வீடு முழுமையடைவதற்குள் 11 தவணைகளில் இன்ஸ்பெக்ஷன் நடத்தப்படும்.கிச்சனில் ஆரம்பித்து வீடு முழுக்க புகை மானிட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். அவைகள் தீயணைப்பு டிபார்ட்மெண்டின் தொடர்பில் இருக்க வேண்டும்.

தீப்பிடித்தால் தொழிற்சாலைகளில் உள்ளது போல ஆட்டோமேட்டிக்கான நீர் பீய்ச்சும் வசதிகளும் இருக்கணும். ஏஸி மட்டுமின்றி ஹீட்டரும் அவசியமாய் பொருத்தப்பட வேண்டும்.


அமெரிக்கா முழுக்கவே பெரும்பாலும் மரவீடுகள் தான். அது ஏன் என்பதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை. சிமெண்ட் மட்டுமின்றி ஆட்கள் கிடைப்பதும் கஷ்டம் என்பதால் மரக் கட்டுமானங்கள் எளிது என்கிறார்கள். ( காடுகள் விசாலமாய் பராமரிக்கப் படுவதால்-மழைக்கும் பஞ்சமில்லை. மரத்திற்கும்!)

மரம் தான் என்பதால் தண்ணீர் சிதறினால் சேதமாகும் என்பதால் பார்த்து பார்த்து புழங்குகிறார்கள். மின்சாரம் மட்டுமில்லை சுத்தமான தண்ணீர் விநியோகம் என்றாலும் கூட அதற்கு மீட்டர். கழிவு நீர் வெளியேற்றத்துக்கும் தனி மீட்டர்!துட்டு என்பதால்நம்மவர்கள் அதில் ரொம்ப சிக்கனம்! பெரும்பாலும் சமையல் வாயு குழாய்களில் சப்ளை செய்யப்படுகிறது. மின்சார அடுப்புகளும் உண்டு. சமைக்கும்போது அதிக புகை உண்டாக்கும் மாமிச அயிட்டங்களை பின்பக்கம் வெளியே வெச்சுக்கணும்!


கிராம பகுதிகளில் உள்ள தண்ணீர் மேல்நிலைத் தொட்டிகள் போல.. சமையல் வாய்வுக்கும் டேங்குகள் அமைத்து அதில் நிரப்பி வைத்து அங்கிருந்து வீடுகளுக்கு சப்ளை! அப்பார்ட்மெண்ட் என்றால் வாடகைவாசிகள் தனித்தனியாய் வாஷிங் மெஷின் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவில் சில மிஷின்களைக வைத்து விடுகிறார்கள். அதை ஒரு முறை உபயோகிக்க ஒரு டாலர்!

தனி வீடுகள் என்றால் அவரவர்கள் வசதிப்படி எல்லாம் வைத்துக் கொள்ளலாம். வீடுகளில் முன்புறம்- பின்புறம் -- பக்கவாட்டில் குறிப்பிட்ட அளவிற்கு புல்வெளி விட வேண்டும் என கணக்கு உண்டு. அவற்றில் மரம் மட்டுமின்றி நம் ஆட்கள் நம்மூரிலிருந்து விதைகள் எடுத்துப் போய் ( கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் நைசாய் !)நம் காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.


வீடுகளில் சிசிடிவி கேமரா அவசியமான ஒன்று. அலுவலகத்தில் இருந்தே அவற்றை கண்ட்ரோல் செய்ய முடியும். யாரும் வந்தாலும்.. நின்றாலும்.. களவுக்கு முயன்றாலும் மாட்டுவர். அறிந்தவர் -தெரிந்தவர் வரும் போது, நாம் வெளியே, -வெளியூர்,- வெளிநாடு-என இருந்தாலும் அங்கிருந்தபடியே திறந்து விடலாம்.

வீடுகள் உள்ள பகுதிகளில் கட்டாயமாக பள்ளி இருக்கும். நீச்சல் குளம் ! விளையாட்டு மைதானம்! நடக்க-நடைபாதை! இவர்கள் பொதுவாய் அந்தந்த காலனிக்குள் பலசரக்கு, ரெஸ்டாரென்ட் போன்று எதையும் அனுமதிப்பதில்லை. ஒரு குண்டூசி தேவை என்றாலும் கூட குறைந்தது 15 நிமிடம் காரில் ஓடி தான் வாங்கிவரணும்.


-என்.சி.மோகன்தாஸ்






      Dinamalar
      Follow us