sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

அமெரிக்காவில் இத்தனை விசாக்களா?

/

அமெரிக்காவில் இத்தனை விசாக்களா?

அமெரிக்காவில் இத்தனை விசாக்களா?

அமெரிக்காவில் இத்தனை விசாக்களா?


டிச 16, 2024

டிச 16, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்கா அப்படி - இப்படி என திட்டிக் கொண்ட அங்கு செல்ல நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் அலைச்சல்களுக்கும் பஞ்சமில்லை.அதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்! அவர்கள் சொல்படி காம்பவுண்டுக்கு வெளியே கப் - சிப் என நிக்கணும். அவன் கேக்கறதெல்லாம் ரெடி பண்ணனும்.

அப்புறம் அப்பாயின்மென்ட்டுக்கு தேவுடானு காத்திருக்கணும். பிறகு இன்டர்வியூ ! அதற்கு பெரும் கட்டணம்! விசா தரவில்லை என்றாலும் கட்டணத்தை அண்ணாச்சி திருப்பி தரமாட்டார்.


விசா பெற்று அமெரிக்கா சென்ற பின்பும் கூட எப்போதும் ஒரு பதைப்பிலேயே வைத்திருப்பர். பதற்றம்! இருக்கிறதை விட்டு விட்டு அப்படியே பறந்து போனாலும் அங்கே நிம்மதியாய் இருக்கிறார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.


நல்ல வேலையா? அது நிலைக்குமா? விசா மாற்றங்கள்-- புதுப்பித்தல்-- அப்புறம் கிரீன் —குடியுரிமை என எப்போதும் குட்டிப் போட்ட பூனையின் நிலைமை!


அமெரிக்கா செல்ல ரகம் ரகமாய் விசாக்கள்உள்ளன. அவை இசைக்கும் ராகங்களுக்கெல்லாம் நாம் இசைந்தாக வேண்டும்.


பணிவன்போடு -பயபக்தியோடு இசைகிறோம்


B,CH,F,L,P,O,R1 என அந்த விசாக்களுக்கு பல முகங்கள்!


B1 என்பது பிசினஸ் விசா; B2 டூரிஸ்ட் விசா! படிப்புக்காக -F !


மிகவும் பாப்புலரானது H1 தான். இந்த விசாவிற்கு கண்டிப்பாய் 4 வருடம் கல்லூரி படிப்பு முடித்திருக்கணும். (+2 + 4) படிப்பு மட்டும் போதாது. வேலையோடு வந்தால்தான் H1.


இதற்கு வருடத்திற்கு மூன்று லட்சத்திற்கு குறையாமல் அப்ளிகேஷன் வருகின்றன. ஆனால் மொத்தம் 65,000தான் தருவர்.


அதற்கு லாட்டரி மூலம் தேர்வு நடக்கும்.


இதில் பட்டம் படித்தவர்களுக்கு 45 ஆயிரம் போக மீதி 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகளுக்கு!


H2 என்பது விவசாயம் மற்றும் இதர தொழிலாளர்களுக்கானது. சுற்றுப் பக்க மெக்சிகோ மற்றும் சௌத் அமெரிக்கர்களுக்குத்தான் இதில் முதன்மை.


H -3 என்பது சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு. அதாவது மருத்துவர்கள் போன்று பயிற்சிக்காக வருபவர்களுக்கு.


H- 4 குடும்ப உறுப்பினர்களுக்கு! இதில் வருபவர்கள் எம்ப்லாய்மென்ட் ஆதரைசேஷன் டாக்குமெண்ட் (EAD) பெற்றால் மட்டும் வேலைக்குப் போகலாம்.


L - கம்பெனி மூலம் டெபுசேஷனில் வருவது. இதில் வந்த பின் வேறு வேலைகளுக்கு மாறிக் கொள்ளலாம்.


L -1 A நிர்வாகிகள் நிறுவன முதலாளிகளுக்கு! இதில் வருபவர்கள் 3 மாதத்திலேயே கிரீன் கார்டுக்கு அப்ளை செய்யலாம்.


L 1 B-- சாஃப்ட்வேர் போன்ற ஸ்பெஷாலிட்டிக்கு!


இவர்கள் வந்த உடனே கிரீன் கார்டு அப்ளை செய்தாலும் கிடைக்க லேட்டாகும்.


O- விசா என்பது பன்முக திறமை கொண்டவர்களுக்கு. கலைஞர்கள் , டைரக்டர், தயாரிப்பாளர் , சயின்டிஸ்ட் நோபல் போன்ற உயரிய பட்டம் பெற்றவர்கள் இதில் அடக்கம்! இவர்கள் உடனே கிரீன் கார்டு அப்ளை பண்ணலாம்.


C - டிரான்சிட் விசா! கப்பல்களில் பணிபுரிபவர்களுக்கு.


P - ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ள மற்றும் ஆர்கெஸ்ட்ரா குழு போன்றவற்றிற்கு.


Q - பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு அரசாங்கமே தரும் விசா! கலை - கலாச்சாரக் குழுக்களும் இதில் அடக்கம்.


R-1 இது ரிலிஜியஸ் விசா. விசாக்களில் வருபவர்கள் உள்ளே சென்று தொடர்ந்து ஆறு மாதங்கள் மட்டுமே இருக்க முடியும். அப்புறம் வெளியே போய் விட்டு தான் திரும்ப வர வேண்டும். இந்த விசா நபர்கள் அங்கு வேலை பார்க்க இயலாது.


இப்படியாக பலவித விசாக்களில் சென்று விட்டாலும் கூட யாரும் - போதும் என்று அப்படியே அடங்கி இருப்பதாய் தெரியவில்லை.


அடுத்து கிரீன் கார்டு , குடியுரிமை என்று அலை பாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


பிற விசாக்கள் என்றால் ஊருக்கு வரும் போதெல்லாம் ஊரில் அமெரிக்கன் எம்பசியில் ஸ்டாம்ப் செய்தால் மட்டுமே திரும்ப உள்ளே அனுமதி!


கிரீன் கார்டு வாங்கி விட்டால் எப்போது வேண்டுமானாலும் வரலாம். போகலாம்.


அடுத்து குடியுரிமை பெற்று விட்டால் எந்த தலைவலியும் இல்லை. ஓட்டுப் போடலாம். தேர்தலில் நிற்கலாம். துணை ஜனாதிபதி வரை பதவி பெறலாம்.


அமெரிக்காவில் பிறந்திருந்தால் எந்த விசா பிரச்சனையும் அவர்களுக்கு இல்லை. அதிலும் மேற்கத்திய நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் விசா ஆன்லைனிலேயே சும்மா அள்ளலாம்.


இந்த கிரீன் கார்டு குடியுரிமை பெறுவதெல்லாம் எப்படி ?


ஐயோ...சாமி...ஆளை விடுங்க! அது பெரிய மண்டை காய்ச்சல் சமாச்சாரம்! சொன்னாலும் விளங்காது !


- என்.சி.மோகன்தாஸ்







      Dinamalar
      Follow us