/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய கந்த சஷ்டி விழா
/
தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய கந்த சஷ்டி விழா
நவ 10, 2024

எந்த ஒரு மனிதனுக்கும், உலகிற்கு எதிரானவர்களை அழிப்பது என்பது, அவர்களது மனது அறிந்தோ அறியாமலோ அவர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும். அந்த வகையில் இந்த கந்த சஷ்டி என்பது மிக முக்கிய விழாவாக கருதப்படுகிறது. ஏனென்றால் முருகக் கடவுள், சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாக கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது.
மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், முருகனுக்குரிய விரத நாட்கள் வந்தாலும், ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச (வளர்பிறையில்) பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி (மகா கந்த சஷ்டி) காலமாகும். ஆறு நாட்களும் நீராகாரம் மட்டும் அருந்தி விரதமிருப்போரும் ஏராளம்.
அத்தகைய கந்த சஷ்டி விழா, தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில், சுமார் 40 ஆண்டு இடைவெளிக்குப் பின், இந்த ஆண்டு மீண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக, வள்ளி, தெய்வானை சமேத கோலத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement